- வீடு›
- பொழுதுபோக்கு›
- வெளியானது நடிகர் விஜய்யின் ‘லியோ'
வெளியானது நடிகர் விஜய்யின் ‘லியோ'
By: vaithegi Thu, 19 Oct 2023 09:55:28 AM
கொண்டாட்டத்தில் ரசிகர்கள் ... நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் லியோ . திரிஷா, கௌதம் வாசுதேவ் மேனன், அர்ஜூன், மிஷ்கின், பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான் ,சஞ்சய் தத் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்து உள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். செவன் ஸ்கிரீன் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ள நிலையில் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், இந்தி போன்ற மொழிகளிலும் படம் வெளியாகிவுள்ளது.
மேலும் இந்த திரைப்படத்தை காண ரசிகர்கள் பெரும் ஆவலில் இருந்த நிலையில், லியோ திரைப்படம் வெளியாவதை ரசிகர்கள் மிகவும் உற்சாகத்துடன் கடந்த ஒருவாரமாகவே கொண்டாடி கொண்டு வருகின்றனர்.
கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் லியோ திரைப்படம் வெளியாகியுள்ளது. கேரளா மற்றும் கர்நாடகாவில் அதிகாலை 4 மணிக்கு லியோ திரைப்படம் வெளியானது. ஆந்திராவில் அதிகாலை 5 மணிக்கு முதல் காட்சி திரையிடப்பட்டது. லியோ திரைப்படம் வெளியாகியுள்ள நிலையில் விஜய் ரசிகர்கள் அதை கொண்டாடி வருகின்றனர். முன்னதாக லியோ திரைப்படத்தின் சிறப்பு காட்சி தமிழ்நாடு அரசு அறிவித்தபடி காலை 9 மணிக்கு வெளியாகும் என்று தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது
இந்நிலையில் தமிழ்நாடு முழுவதும் நடிகர் விஜய்யின் லியோ திரைப்படம் வெளியாகி உள்ளது. இதன் காரணமாக விஜயின் ரசிகர்கள் பட்டாசு வெடித்து மேளதாளத்துடன் படத்தைக் காண கொண்டாட்டத்தின் உச்சியில் திளைத்து கொண்டு வருகின்றனர்.