- வீடு›
- பொழுதுபோக்கு›
- நடிகர் விஜய்யின் அடுத்த படத்தை தயாரிக்கிறது சன் பிக்சர்ஸ்
நடிகர் விஜய்யின் அடுத்த படத்தை தயாரிக்கிறது சன் பிக்சர்ஸ்
By: Nagaraj Thu, 10 Dec 2020 10:04:40 PM
நடிகர் விஜய் நடிக்கும் அடுத்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படம் விஜய்யின் 64-வது திரைப்படமாக தயாராகியுள்ளது. ஏப்ரல் மாதம் 9ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்ட இந்த திரைப்படம் ஊரடங்கு காரணமாக இன்று வரை ரிலீசாகாமல் தொடர்ந்து தள்ளிப்போய் வருகிறது.
ஓடிடி நிறுவனங்கள் இந்த திரைப்படத்தை வெளியிட ஆர்வம் காட்டி வரும் பொழுதும் திரைப்படத்தை திரையரங்குகளில் வெளியிட படக்குழுவினர் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்தநிலையில் விஜய் அடுத்து நடிக்க உள்ள அவரது 65வது திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பாபு சிவன் இயக்கத்தில் 2009ஆம் ஆண்டு வெளியான வேட்டைக்காரன் படத்தை
சன் பிக்சர்ஸ் நிறுவனம் விலைக்கு வாங்கி வெளியிட்டது. இந்தத் திரைப்படம்
சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு லாபகரமான திரைப்படமாக அமைந்த நிலையில்
இதைத்தொடர்ந்து ராஜ் குமார் இயக்கத்தில் சுறா திரைப்படத்தை வெளியிட்டது.
மீனவனாக
விஜய் நடித்து இருந்த இந்த திரைப்படம் கலவையான விமர்சனங்களை சந்திக்க இதன்
பின்னர் நீண்ட நாட்கள் திரைப்பட தயாரிப்பு மற்றும் விநியோக பணிகளில்
ஈடுபடாத சன் பிக்சர்ஸ் நிறுவனம் 2018ம் ஆண்டில் ஏ ஆர் முருகதாஸ்
இயக்கத்தில் சர்க்கார் திரைப்படத்தை தயாரித்தது. பிரம்மாண்டமாக தயாரான
இந்து திரைப்படம் 200 கோடி ரூபாய் வசூலைக் கடந்து தமிழக திரை வர்த்தகத்தில்
புதிய மைல் கல்லை எட்டியது.
இதைத்தொடர்ந்து மீண்டும் ஒருமுறை சன்
பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் விஜய் நடிக்கும் அவரது 65வது திரைப்படம்
தயாராக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கோலமாவு கோகிலா
மற்றும் டாக்டர் ஆகிய திரைப்படங்களை இயக்கிய நெல்சன் இந்த திரைப்படத்தை
இயக்க உள்ளதாகவும் கத்தி மாஸ்டர் ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து அனிருத்
மூன்றாவது முறையாக விஜய் படத்திற்கு இசையமைக்க உள்ளதாகவும்
அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
படக்குழுவினர் விரைவில் அறிவிக்கப்பட்டு ஜனவரி மாதம் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என தெரியவந்துள்ளது.