- வீடு›
- பொழுதுபோக்கு›
- தங்கலான் படத்தில் 3 வேடங்களில் நடிக்கும் நடிகர் விக்ரம்
தங்கலான் படத்தில் 3 வேடங்களில் நடிக்கும் நடிகர் விக்ரம்
By: Nagaraj Tue, 11 July 2023 7:01:58 PM
சென்னை: தங்கலான் படத்தில் மூன்று வேடத்தில் விக்ரம் நடிக்கிறார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள தங்கலான் படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ளது. இந்த படத்தில் நடிகர் பசுபதி, மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.
கோலார் தங்க சுரங்கத்தில் தமிழர்கள் பட்ட துயரத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்படும் படம் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்நிலையில், இப்படத்தில் நடிகர் விக்ரம் மூன்று தோற்றங்களில் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Tags :
tangalan |
vikram |
starring |