Advertisement

கர்நாடகா கேஜிஎஃபில் வாழும் தமிழர்களை சந்தித்த நடிகர் விக்ரம்

By: Nagaraj Tue, 20 Dec 2022 12:09:31 PM

கர்நாடகா கேஜிஎஃபில் வாழும் தமிழர்களை சந்தித்த நடிகர் விக்ரம்

சென்னை: கர்நாடகாவில் உள்ள கேஜிஎப் தமிழர்களை சந்தித்து பேசியுள்ளார் நடிகர் விக்ரம். இந்த வீடியோ செம வைரலாகி வருகிறது.

பா.இரஞ்சித் டைரக்டு செய்யும் “தங்கலான்” படத்தில் நடிகர் விக்ரம் நடித்து வருகிறார். இப்படத்தை ஞானவேல் ராஜா தயாரிக்க ஜி.வி.பிரகாஷ்குமார் இசை அமைக்கிறார். இந்த படம் கர்நாடக மாநிலத்திலுள்ள கே.ஜி.எஃப் பற்றிய கதை என பா.இரஞ்சித் தெரிவித்து இருந்தார். இதன் காரணமாக இப்படம் மீது ரசிகர்கள் மத்தியில் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

kgf,tamils,cinema,actor vikram,meeting,video ,கேஜிஎப், தமிழர்கள், சினிமா, நடிகர் விக்ரம், சந்திப்பு, வீடியோ

அண்மையில் இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி கவனம் ஈர்த்தது. அத்துடன் இந்த படத்தின் சூட்டிங் முடிந்ததும் படக்குழுவினருடன் நடிகர் விக்ரம் ஒகேனக்கல் ஆற்றில் குளித்து விளையாடும் வீடியோவை தன் சமூகவலைதளத்தில் பகிர்ந்திருந்தார்.


இந்த நிலையில் விக்ரம் கேஜிஎஃபில் வாழும் தமிழர்களை சந்தித்து உள்ளார். இதுகுறித்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.

Tags :
|
|
|