Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • உங்கள் துணிச்சலை பாராட்டுகிறேன்... கங்கனாவுக்கு நடிகர் விஷால் ஆதரவு

உங்கள் துணிச்சலை பாராட்டுகிறேன்... கங்கனாவுக்கு நடிகர் விஷால் ஆதரவு

By: Monisha Fri, 11 Sept 2020 12:20:59 PM

உங்கள் துணிச்சலை பாராட்டுகிறேன்... கங்கனாவுக்கு நடிகர் விஷால் ஆதரவு

நடிகை கங்கனா ரணாவத் மராட்டிய அரசை எதிர்த்து நிற்கிறார். மும்பை போலீசையும் விமர்சித்து வருகிறார். இதனால் ஆளும் சிவசேனா கட்சியினர் கங்கனாவுக்கு எதிராக போராட்டங்களில் குதித்துள்ளனர். மும்பையில் உள்ள கங்கனாவின் பங்களாவை இடிக்கும் முயற்சிகளும் நடந்தன. இதற்கு கோர்ட்டில் தடை பெற்றுள்ளார்.

இந்தி நடிகர், நடிகைகள், இயக்குனர்கள் பலர் கங்கனாவுக்கு எதிராக உள்ளனர். இந்த பிரச்சினை இந்தியா முழுவதும் கவனம் பெற்றுள்ளது. இந்த நிலையில் கங்கனாவுக்கு நடிகர் விஷால் ஆதரவு தெரிவித்துள்ளார். இதுகுறித்து விஷால் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

kangana ranaut,actor vishal,support,courage,example ,கங்கனா ரணாவத்,நடிகர் விஷால்,ஆதரவு,துணிச்சல்,உதாரணம்

"கங்கனா உங்கள் துணிச்சலை பாராட்டுகிறேன். எது சரி, எது தவறு என்பதற்கு தயங்காமல் குரல் கொடுக்கிறீர்கள். இது உங்களின் தனிப்பட்ட பிரச்சினை இல்லை. ஆனாலும் அரசின் எதிர்ப்பை எதிர்கொள்வதில் உறுதியாக இருந்தீர்கள். இது உங்களை ஒரு உதாரணம் ஆக்கி உள்ளது.

1920-களில் பகத்சிங் செய்ததற்கு நிகரான காரியம். அரசு செய்வது சரியில்லை என்றால் எதிர்த்து பேச உதாரணத்தை ஏற்படுத்தி உள்ளீர்கள். உங்களுக்கு தலை வணங்குகிறேன்" என்று கூறியுள்ளார்.

Tags :