Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • தான் கொடுத்த புகாருக்கு நடவடிக்கை மேற்கொண்ட பிரதமருக்கு நடிகர் விஷால் நன்றி

தான் கொடுத்த புகாருக்கு நடவடிக்கை மேற்கொண்ட பிரதமருக்கு நடிகர் விஷால் நன்றி

By: Nagaraj Sun, 01 Oct 2023 12:50:25 PM

தான் கொடுத்த புகாருக்கு நடவடிக்கை மேற்கொண்ட பிரதமருக்கு நடிகர் விஷால் நன்றி

சென்னை: பிரதமருக்கு நன்றி... தணிக்கை வாரிய அதிகாரிகள் குறித்து தான் அளித்த புகார் மீது விசாரணையைத் தொடங்கியதற்காக பிரதமர் மோடி மற்றும் மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே ஆகியோருக்கு விஷால் சமூக ஊடகங்களில் நன்றி தெரிவித்தார்

மார்க் ஆண்டனியின் ஹிந்தி வெளியீடு தொடர்பாக நடிகர் விஷால் சிபிஎஃப்சி மீது புகார் அளித்தார். மும்பையில் இயங்கி வரும் மத்திய திரைப்பட தணிக்கை அலுவலகம் மீது நடிகர் விஷால் ஊழல் குற்றச்சாட்டை பதிவு செய்திருந்த நிலையில், இதற்கு உடனடியாக நடவடிக்கை மேற்கொண்ட பிரதமர் மோடி மற்றும் மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே ஆகியோருக்கு விஷால் நன்றி தெரிவித்துள்ளார்.

central government,prime minister modi,inquiry officer,vishal,action ,மத்திய அரசு, பிரதமர் மோடி, விசாரணை அதிகாரி, விஷால், நடவடிக்கை

இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியான படம் மார்க் ஆண்டனி. டைம் ட்ராவல் நிகழ்வை அடிப்படையாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டிருந்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில், விஷாலுக்கு பெரிய வெற்றிப்படமாகவும் அமைந்தது.

இதனிடையே இந்த படத்தின் இந்தி பதிப்புக்கான தணிக்கை சான்று வழங்குவதற்காக தணிக்கை அதிகாரிகள் தன்னிடம் ரூ6.5 லட்சம் லஞ்சம் கேட்டதாக தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ மூலம் புகார் அளித்திருந்த நடிகர் விஷால் அதற்காக ஆதாரங்களையும் பதிவிட்டு இது குறித்து மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேண்டுகோள விடுத்திருந்தார்.

விஷாலின் கோரிக்கைக்கு உடனடியாக பதில் அளித்த மத்திய தகவல் தொடர்பு மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம், இது குறித்து உடனடியாக விசாரணை நடத்த விசாரணை அதிகாரி மும்பைக்கு அனுப்பப்படுவார் என்று அறிவித்திருந்தது.

இந்த பதிலுக்கு நன்றி தெரிவித்துள்ள நடிகர் விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில், மும்பை தணிக்கை வாரிய அதிகாரிகள் ஊழல் விவகாரம் தொடர்பான இந்த முக்கியமான விஷயத்தில் உடனடி நடவடிக்கை எடுத்ததற்காக மத்திய அரசுக்கு நான் மனதார நன்றி கூறுகிறேன். தேவையான சமயத்தில் தக்க நடவடிக்கை எடுத்தற்காக மிக்க நன்றி. இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Tags :
|