Advertisement

நடிகர் யோகிபாபுவுக்கு இரண்டாவது பெண்குழந்தை பிறந்தது

By: Nagaraj Mon, 24 Oct 2022 9:45:26 PM

நடிகர் யோகிபாபுவுக்கு இரண்டாவது பெண்குழந்தை பிறந்தது

சென்னை; நகைச்சுவை நடிகர் யோகி பாபுக்கு இன்று இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த தகவல் தெரிந்து ரசிகர்கள் யோகிபாபுவுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான ‘லொள்ளு சபா’ நிகழ்ச்சியின் உதவி இயக்குநராக பணிபுரிந்த பாபு, 2009-ல் வெளியான ‘யோகி’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். அதன்பிறகு, படத்தின் பெயரை அடைமொழியாக மாற்றி யோகி பாபு என்று மாற்றிக்கொண்டார். அதனைத் தொடர்ந்து பல படங்களில் நடித்து புகழ்பெற்றார்.

விஜய், அஜித், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். இவரின் காமெடி நடிப்பு பலரது ரசிகர்களையும் கவர்ந்துள்ளது. யோகி பாபு கதாநாயகனாக நடித்த மண்டேலா படமும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

yogibabu,fans,congratulations,baby,born ,யோகிபாபு, ரசிகர்கள், வாழ்த்து, குழந்தை, பிறந்தது

தமிழ் சினிமா மட்டுமின்றி பாலிவுட்டிலும் நடித்து வருகிறார். தற்போது நயன்தாரா, ஷாருக்கான், விஜய் சேதுபதி நடிக்கும் ஜவான் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

கடந்த 2020-ம் ஆண்டு மஞ்சு பார்கவி என்பவரை யோகி பாபு திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியருக்கு கடந்தாண்டு ஆண் குழந்தை பிறந்தது. அண்மையில் அக்குழந்தையின் முதலாவது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடினர்.


இந்நிலையில் இன்று (அக்-24) இந்த தம்பதியினருக்கு இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனையடுத்து யோகி பாபுவுக்கு திரைத்துறையினர் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Tags :
|
|