Advertisement

படத்தில் நடிக்க குதிரை சவாரி பயிற்சி எடுத்த நடிகர், நடிகைகள்

By: Nagaraj Mon, 03 Oct 2022 09:57:21 AM

படத்தில் நடிக்க குதிரை சவாரி பயிற்சி எடுத்த நடிகர், நடிகைகள்

சென்னை: படங்களில் நடிக்க வேண்டும் என்பதற்காகவே சில நடிகர், நடிகைகள் குதிரை சவாரி பயிற்சி எடுத்துள்ளனர். அப்படி குதிரை சவாரி பயிற்சி பெற்ற சில பிரபலங்கள் யார் என்று தெரியுங்களா!

நடிகர் கார்த்தி தற்போது மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்தார். அதில் வந்தியத்தேவன் என்ற முக்கிய வேடத்தில் நடித்தார் கார்த்தி. முதலில் குதிரை சவாரி கற்றுக் கொண்டது காஷ்மோரா படத்திற்காக. தற்போது பொன்னியின் செல்வன் படத்திலும் கார்த்தி குதிரை சவாரி செய்யும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

தமன்னா: ராஜமௌலியின் பாகுபலியில் அவந்திகா என்ற துணிச்சலான பெண்ணாக தமன்னா நடித்தார். இந்தப் படத்திற்காக குதிரை சவாரி, வாள் சண்டை போன்றவற்றை கற்றுக்கொண்டார். இதற்காக சில நடிகைகளிடம் பயிற்சியும் எடுத்தார் தமன்னா.

actresses,kajal-aggarwal,karthi,tamannaah,trisha, ,காஜல் அகர்வால், குதிரை சவாரி, தமன்னா, த்ரிஷா, நடிகைகள்

திரிஷா: பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவை இளவரசியாக த்ரிஷா நடித்துள்ளார். படத்தில் குதிரை சவாரி காட்சிகள் இடம்பெறும் என்பதால், 2020 ஆம் ஆண்டு படத்துக்காக பயிற்சி எடுக்க ஒரு நிறுவனத்தில் சேர்ந்தார். மேலும் அவர் குதிரை சவாரி செய்யும் புகைப்படத்தையும் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

காஜல் அகர்வால்: ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படத்தில் காஜல் அகர்வால் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அதன் பிறகு காஜல் அகர்வால் கர்ப்பமானார், குழந்தை பிறந்து 4 மாதங்களுக்குப் பிறகு, அவர் மீண்டும் இந்தியன் 2 படப்பிடிப்பில் சேர்ந்தார். இந்த படத்திற்காக காஜல் அகர்வால் குதிரை சவாரி பயிற்சி எடுத்தார்.

Tags :
|
|