Advertisement

மீண்டும் ஒரு படத்தை தயாரிக்கிறார் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி

By: Nagaraj Sat, 15 Oct 2022 10:33:37 PM

மீண்டும் ஒரு படத்தை தயாரிக்கிறார் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி

சென்னை: நடிகை ஐஸ்வர்யா லட்சுமி மீண்டும் ஒரு படத்தை தயாரிக்கிறார் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது. விஷாலின் ஆக்க்ஷன் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் ஐஸ்வர்யா லட்சுமி. தனுஷுடன் ஜெகமே தந்திரம் படத்தில் நடித்தவர் .

மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் ஐஸ்வர்யா லட்சுமியின் நடிப்பு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது விஷ்ணு விஷாலுடன் கட்டா குஸ்தியும், பிரியா இயக்கத்தில் அசோக் செல்வன் படமும் கைவசம் உள்ளன. இவர் தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் நடித்துள்ளார். ஏற்கனவே சாய்பல்லவி நடித்த கார்க்கி படத்தை ஐஸ்வர்யா லட்சுமி தயாரித்திருந்தார்.

Tags :