Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • காதலரை திருமணம் செய்துள்ளார் நடிகை அமலாபால்... குவியும் பாராட்டுக்கள்

காதலரை திருமணம் செய்துள்ளார் நடிகை அமலாபால்... குவியும் பாராட்டுக்கள்

By: Nagaraj Sun, 05 Nov 2023 8:12:01 PM

காதலரை திருமணம் செய்துள்ளார் நடிகை அமலாபால்... குவியும் பாராட்டுக்கள்

சென்னை: காதலரை திருமணம் செய்துகொண்டுள்ளார் நடிகை அமலா பால். அவருக்கு ரசிகர்கள் பாராட்டுக்கள் தெரிவித்து வருகின்றனர்.

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவதாக இருப்பவர் தான் நடிகை அமலா பால். சமீபத்தில் அவரது பிறந்த நாள் தன்னுடைய காதலர் ஜகத் தேசாய் ப்ரொபோஸ் செய்த புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளிவந்தது.

இந்நிலையில் அமலா பால் காதலர் ஜகத் தேசாய் திருமணம் செய்துள்ளார்.

 ,தம்பதி, நடிகை அமலாபால், திருமணம், ரசிகர்கள், வாழ்த்து

தற்போது அவருடைய இன்ஸ்டகிராம் பக்கத்தில், இரண்டு ஆத்மாக்கள், ஒரு விதி, என் தெய்வீகமான பெண்ணுடன் கைகோர்த்து இந்த வாழ்நாள் முழுவதும் நடக்கப்போகிறேன் என்று குறிப்பிட்டு இருவரும் எடுத்து கொண்ட புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

தற்போது இந்த தம்பதியர்களுக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Tags :