Advertisement

நடிகை அமலா பால் திருமணம் செய்ய உள்ளாராம்

By: vaithegi Thu, 26 Oct 2023 1:50:56 PM

நடிகை அமலா பால் திருமணம் செய்ய உள்ளாராம்

நடிகை அமலா பால் தனது நீண்டநாள் காதலர் ஜெகத் தேசாய் என்பவரை திருமணம் செய்யவுள்ளார். வியாழக்கிழமை (அக்டோபர் 26) தனது 32 வது பிறந்தநாளைக் கொண்டாடும் அமலாபாலுக்கு சமூக வலைதளங்களில் ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டு வருகிறார்கள்.

இந்நிலையில், அமலா பாலின் காதலர் ஜெகத் தன்னுடைய காதலை சொல்லவேண்டும் என்ற நோக்கத்தோடு அமலா பாலை ஒரு இடத்திற்கு அழைத்து சென்று அங்கு சிலரை நடனமாட வைத்து மோதிரம் கொடுத்து தன்னுடைய காதலை வெளிப்படுத்தி அமலா பாலுக்கு ப்ரொபோஸ் செய்தார். இதை பார்த்து மெய் சிலிர்த்து போன அமலா பாலா உடனடியாக மோதிரத்தை வாங்கி கொண்டு ஜெகத் காதலை ஏற்றுக்கொண்டார்.

actress amala paul,marriage ,நடிகை அமலா பால் ,திருமணம்

இதையடுத்து இது தொடர்பான வீடியோவையும் அமலா பால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியீட்டு இருக்கிறார். அந்த வீடியோவில் ” அமலா பால் மற்றும் அவருடைய காதலர் ஒரு ஃபேன்ஸி கஃபேவில் இருக்கிறார்கள். ஜகத் அமலாவை ஒரு சிறப்பு நடன நிகழ்ச்சி மூலம் ஆச்சரியப்படுத்துகிறார். ஒரு சில பின்னணி நடனக் கலைஞர்களுடன் நடனமாடிய பிறகு, ஜகத் அமலாவை மேடைக்கு அழைத்து வருகிறார்.

அழைத்து வந்து மோதிரத்தை கொடுத்து “என்னை திருமணம் செய்து கொள்வீர்களா” என்று அவர் கேட்டவுடன், “ஆம்” என்று சம்மதம் தெரிவிக்கிறார். பிறகு அமலா ஜெகத் இருவரும் ஒருவரையொருவர்கட்டியணைத்து கொண்டு முத்தமிட்டு கொள்கிறார்கள்” தன்னுடைய காதலனை அமலா பால் அறிவித்து உள்ள நிலையில் ரசிகர்கள் பலரும் அவருக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டு வருகிறார்கள்.

தற்போது, தன்னுடைய காதலனை அமலா பால் அறிவித்துள்ள காரணத்தால் அமலா பால் திருமணம் உறுதியாகியுள்ளது. விரைவில் திருமண தேதியை அமலா பால் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.


Tags :