Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • வேட்டி, சட்டை அணிந்து சகோதரர்களுடன் புகைப்படம் எடுத்து வெளியிட்ட நடிகை அமலாபால்

வேட்டி, சட்டை அணிந்து சகோதரர்களுடன் புகைப்படம் எடுத்து வெளியிட்ட நடிகை அமலாபால்

By: Nagaraj Thu, 11 June 2020 5:57:45 PM

வேட்டி, சட்டை அணிந்து சகோதரர்களுடன் புகைப்படம் எடுத்து வெளியிட்ட நடிகை அமலாபால்

தன் சகோதரர்களுடன் வேட்டி, சட்டை அணிந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார் நடிகை அமலாபால்.

தமிழில் பிரபல நடிகையாக இருக்கும் அமலா பால், வேஷ்டி சட்டை அணிந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளத்தில் உலா வருகிறது. நடிகை அமலாபால் இந்த கொரோனா ஊரடங்கு காலத்தில் தனது சமூக வலைத்தளத்தில் விதவிதமான புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார்.

இந்த நிலையில் தற்போது அவர் தனது சகோதரர்களுடன் வேஷ்டி சட்டை அணிந்து கொண்டு ஜாலியாக போஸ் கொடுத்துள்ள ஒரு புகைப்படம் தற்போது இணையதளங்களில் உலா வருகிறது.

amala paul,photo,vestry shirt ,அமலா பால், சகோதரர்கள், வேஷ்டி, சட்டை, இணையம்

இந்த புகைப்படத்தை ரசிகர்கள் பலரும் ரசித்து வருவதோடு, ‘வேஷ்டி சட்டை உங்களுக்கு பொருத்தமாக இருக்கிறது என்றும் கமெண்ட் அளித்து கூறியுள்ளனர். ஊரடங்கு காரணத்தால் படப்பிடிப்புகள் ஏதும் நடக்காத நிலையில் ஓய்வில் உள்ள அமலாபால் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கிறார்.

அவ்வபோது தனது புகைப்படங்களை பதிவேற்றுகிறார். அந்த வகையில் இந்த படத்தை பதிவேற்றி உள்ளார். தற்போது இந்த படம் மிகவும் வைரலாகி வருகிறது.

Tags :
|