Advertisement

நடிகை அமிர்தா காபியில் குளிக்கும் புகைப்படம் செம வைரல்

By: Nagaraj Sat, 18 June 2022 8:45:49 PM

நடிகை அமிர்தா காபியில் குளிக்கும் புகைப்படம் செம வைரல்

சென்னை: நடிகை அமிர்தா தண்ணீரில் இல்லாமல் காபியில் குளிப்பதைப் போல புகைப்படம் வெளியிட்டுள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

நடிகை அமிர்தா படைவீரன் (2018) படத்தின் மூலம் முன்னணி நடிகையாக அறிமுகமானார். அதைத்தொடர்ந்து இவர் காளி (2018) படத்தில் விஜய் ஆண்டனிக்கு இணையாக கதாநாயகிகளில் ஒருவராக நடித்தார்.அட்லீயின் பிகில் (2019) திரைப்படத்தில் தமிழ்நாடு கால்பந்து அணியின் தலைவியாக தென்றல் கதாபாத்திரத்தில் நடித்தார்.

அடுத்ததாக லிப்ட் (2021), வணக்கம்டா மாப்ள போன்ற படங்களில் நடித்துள்ளார்,தமிழ் திரையுலகில் சில படங்களில் நடித்தாலும் தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி நடித்து தனக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளத்தையே கொண்டுள்ளார்.

coffee bath,doctor,counseling,viral,fans,actress ,காபி குளியல், மருத்துவர், ஆலோசனை, வைரல், ரசிகர்கள், நடிகை

அம்ரிதா, கிஷோர் திருமலா இயக்கிய ரெட் (2021) படத்தின் மூலம் தெலுங்கிலும் அறிமுகமாகியுள்ளார்.கிராமாயணம் என்ற கன்னடப் படத்தில் வினய் இராஜ்குமாருடன் அறிமுகமாக உள்ளார்,இவ்வளவு பிசியாக இருக்கும் அமிர்தா அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பதுண்டு.

அமிர்தா தற்பொழுது தான் குளிக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார், அது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளார். அதுவும் தண்ணீரில் இல்லாமல் காபியில் குளிப்பதைப் போல புகைப்படம் வெளியிட்டுள்ளார். அந்தப் புகைப்படத்திற்கு கீழ் இது ஒரு பெய்டு விளம்பரம் ஆகும். கஃபைன் மற்றும் விட்டமின் இ நிறைந்த காபியில் குளிப்பது உடல் நலத்திற்கு நன்மை தரும் என குறிப்பிட்டுள்ளார்.

இதனை மருத்துவரின் ஆலோசனையின்றி பயன்படுத்துவதை தவிர்க்கவும் என கேப்ஷனில் குறிப்பிடப்பட்டுள்ளது .இதைத்தொடர்ந்து இந்த புகைப்படம் ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது,

Tags :
|
|
|