Advertisement

நடிகை அஞ்சலியின் சொத்து ரூ.10 கோடி மட்டும்தானாம்

By: Nagaraj Sat, 27 Aug 2022 2:51:17 PM

நடிகை அஞ்சலியின் சொத்து ரூ.10 கோடி மட்டும்தானாம்

சென்னை: பல ஆண்டுகளாக நடித்தும் நடிகை அஞ்சலியின் சொத்து வெறும் ரூ.10 கோடிதான் என்ற தகவல் கோலிவுட்டில் பரபரவென்று பரவி வருகிறது.

தமிழில் 2007-ல் கற்றது தமிழ் படத்தில் அறிமுகமான அஞ்சலி தொடர்ந்து நிறைய படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார். தெலுங்கிலும் அதிக படங்களில் நடித்து இருக்கிறார். சில வருடங்களுக்கு முன்பு உடல் எடை அதிகமானதால் படங்கள் குறைந்தன. தற்போது பட வாய்ப்புகளை பிடிக்க கடும் உடற்பயிற்சிகள் செய்து எடையை குறைத்து இருக்கிறார்.

ஆனாலும் எதிர்பார்த்த படங்கள் இல்லை. இந்தநிலையில் அஞ்சலியின் சொத்து குறித்து தெலுங்கு இணைய தளங்களில் புதிய தகவல் பரவி வருகிறது. 15 ஆண்டுகளாக சினிமாவில் நீடிக்கும் அஞ்சலி நிறைய சொத்து சேர்த்து இருப்பார் என்றே பலரும் நினைத்து இருப்பார்கள். ஆனால் அதில் உண்மை இல்லை.

property,actress anjali,left,all these years,relative ,சொத்து, நடிகை அஞ்சலி, வெளியேறினார், இத்தனை ஆண்டுகள், உறவினர்

தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து அவர் சேர்த்து வைத்துள்ள மொத்த சொத்தின் மதிப்பு வெறும் ரூ.10 கோடிதான் என்றும் அந்த தகவலில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

ஒரு படத்துக்கு ரூ.50 லட்சம் முதல் ரூ.80 லட்சம் வரை வாங்கும் அஞ்சலியால் இத்தனை காலம் சினிமாவில் இருந்தும் இவ்வளவுதான் சம்பாதிக்க முடிந்ததா? என்று ரசிகர்கள் ஆச்சரியத்தோடு வலைத்தளத்தில் பதிவுகள் வெளியிட்டு வருகிறார்கள்.

ஏற்கனவே சொத்து பிரச்சினையில் சென்னையில் உள்ள உறவினர் வீட்டில் இருந்து அஞ்சலி வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
|