- வீடு›
- பொழுதுபோக்கு›
- படப்பிடிப்பு தளத்தில் இருந்து எடுத்த புகைப்படத்தை வெளியிட்ட நடிகை பாவனி
படப்பிடிப்பு தளத்தில் இருந்து எடுத்த புகைப்படத்தை வெளியிட்ட நடிகை பாவனி
By: Nagaraj Wed, 11 Oct 2023 11:04:42 AM
சென்னை: படப்பிடிப்பு தளத்தில் இருந்து எடுத்த புகைப்படங்களை சமூக வலைதளத்தில் நடிகை பாவனி வெளியிட்டுள்ளார். இதனால் மீண்டும் சீரியலில் நடிக்க தொடங்கி உள்ளார் நடிகை பாவனி என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மிகப்பெரிய அளவில் பிரபலமானவர் பாவனி. மாடல் அழகியான இவர் சின்ன தம்பி தொடரில் நடித்து சீரியலில் என்ட்ரி ஆனார். தொடர்ந்து தமிழின் முன்னணி தொலைக்காட்சிகளில் பல்வேறு சீரியலில் நடித்து புகழ் பெற்றுள்ளார்.
இவர் தெலுங்கு நடிகர் பிரதீப் குமாரை 2017 இல் திருமணம் செய்து கொண்டார். பின்னர் இருவரும் இடையே ஏற்பட்ட பிரச்சனையால் பிரதீப் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அதன் பின்னர் மீண்டும் சீரியல் வாய்ப்பு கிடைத்தது. அந்த சமயத்தில் தான் பிக்பாஸில் கலந்துக்கொண்டார்.
பிக்பாஸில் அமீர் இவரை ஒரு மனதாக உருகி உருகி காதலித்தார். பின்னர் அந்நிகழ்ச்சியில் இருந்து வெளியில் வந்த பின்னர் அமீரின் உண்மையான காதலை புரிந்துக்கொண்டு அவருக்கு ஓகே சொல்லி காதலித்து வருகிறார்கள். இவர்கள் இருவரும் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து வருகிறார்கள்.
அதற்கு ஓகே சொன்னதே பாவனியின் அம்மா தானாம். ஒரே பிளாட்டில் ஒன்றாக இருங்கள் என அட்வைஸ் கொடுத்தாராம். மேலும், இவர்களுடன் அமீரின் பெரியம்மா மற்றும் அண்ணனையும் அந்த வீட்டில் தங்க வைத்துள்ளதாக பாவனி கூறியிருந்தார். இவர்கள் இருவரும் அடுத்த வருடம் திருமணம் செய்துக் கொள்ள உள்ளனர்.
எந்த ஒரு தொடரிலும் கமிட்டாகாத பாவனி ரெட்டி தற்போது, புதிய தொடர் ஒன்றில் கமிட்டாகி இருப்பதாக தெரிகிறது. படப்பிடிப்பு தளத்தில் இருந்து அவர் போட்டோ வெளியிட்டுள்ளார். ஆனால், என்ன தொடர் என்பதையெல்லாம் அவர் தெரிவிக்கவில்லை.