Advertisement

தமிழில் அறிமுகமான முதல் படத்தை கொண்டாடிய நடிகை!

By: Monisha Sat, 11 July 2020 1:31:05 PM

தமிழில் அறிமுகமான முதல் படத்தை கொண்டாடிய நடிகை!

தமிழ் திரையுலகில் கடந்த 2010 ஆம் ஆண்டு பிரபல இயக்குனர் விஜய் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் 'மதராசபட்டணம்' இந்த திரைப்படத்தில் தான் நடிகையாக முதன் முதலில் தமிழில் அறிமுகமானவர் எமி ஜாக்சன். இந்த நிலையில் இந்த படம் வெளி வந்து 10 ஆண்டுகள் ஆனதை அடுத்து நடிகை எமிஜாக்சன் இந்த படத்தின் சிறப்புக் காட்சியை தனது உறவினர்களுக்காக ஏற்பாடு செய்துள்ளார்.

இதுகுறித்து தனது சமூக வலைத்தளத்தில் அவர் பதிவு செய்த ஒரு பதிவில் கூறியிருப்பதாவது:- "மதராசபட்டணம் படத்தின் 10 ஆண்டுகள். பிரகாசமான கண்களுடன் குழந்தை முகத்துடன் இந்தியாவை நான் முதன் முதலில் பார்த்தேன். இந்த படத்தின் பத்தாவது ஆண்டு விழாவை கொண்டாட காலை எழுந்தபோது ஒரு அழகான அனுபவமாக எனக்கு இருந்தது.

tamil,director vijay,madarasapattanam,amy jackson,luck ,தமிழ்,இயக்குனர் விஜய்,மதராசபட்டணம்,எமி ஜாக்சன்,அதிர்ஷ்டம்

எனது திரைப் பயணத்தை தொடங்குவதற்கு காரணமாக இருந்த இந்த படத்தை எனது குடும்பத்தினரும் காண, இந்த படத்தின் சிறப்புக் காட்சிக்கு ஏற்பாடு செய்தேன். எனது குடும்பத்தினர் அனைவரும் இந்த படத்தை கண்டு களித்தனர்.

இந்த படம் எனக்கு ஒரு அதிர்ஷ்டம் என்றே கூறலாம். இயக்குனர் விஜய் அண்ணா அவர்களுக்கு எனது வாழ்நாள் முழுவதும் நன்றி தெரிவித்து கொள்கிறேன்" என்று அவர் கூறியுள்ளார்.

Tags :
|