Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • படப்பிடிப்பு தளத்தில் எடுத்த வீடியோவை வெளியிட்ட நடிகை இந்து சௌத்ரி

படப்பிடிப்பு தளத்தில் எடுத்த வீடியோவை வெளியிட்ட நடிகை இந்து சௌத்ரி

By: Nagaraj Wed, 23 Aug 2023 8:32:53 PM

படப்பிடிப்பு தளத்தில் எடுத்த வீடியோவை வெளியிட்ட நடிகை இந்து சௌத்ரி

சென்னை: வீடியோவை பதிவிட்டார்... சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் மீனா தொடரில் நடித்துவரும் நடிகை இந்து செளத்ரி சமூக வலைதளத்தில் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

சன் தொலைக்காட்சியில் பகல் நேரங்களில் அதிக எண்ணிக்கையில் தொடர்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. அதில் மீனா தொடர் ஜூலை இறுதியிலிருந்து ஒளிபரப்பாகி வரும் புதிய தொடராகும்.

shooting,site,reception,indu chaudhry,series,public reception ,படப்பிடிப்பு, தளம், வரவேற்பு, இந்து சௌத்ரி, தொடர், மக்கள் வரவேற்பு

மீனா தொடரில் முதன்மை பாத்திரத்தில் நடிப்பவர் நடிகை இந்து செளத்ரி. இவர் இதற்கு முன்பு ஆனந்த ராகம் தொடரில் நடித்து மக்களிடையே வரவேற்பைப் பெற்றவர்.

இந்துவுக்கு ஜோடியாக ஜெய் சீனிவாசா குமார் நடித்து வருகிறார். இவர் இலக்கியா தொடரில் நடித்தவர். மக்களிடம் பரீட்சயமான இருவர் முதன்மை பாத்திரத்தில் நடிப்பதால், இந்தத் தொடருக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில், இந்தத் தொடரின் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட வீடியோவை நடிகை இந்து செளத்ரி பகிர்ந்துள்ளார்.

Tags :
|
|