Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • மீண்டும் சர்ச்சையில் நடிகை கஸ்தூரி: பதிலடி கொடுத்தும் விமர்சிக்கும் ரசிகர்கள்

மீண்டும் சர்ச்சையில் நடிகை கஸ்தூரி: பதிலடி கொடுத்தும் விமர்சிக்கும் ரசிகர்கள்

By: Nagaraj Sun, 08 Oct 2023 9:03:17 PM

மீண்டும் சர்ச்சையில் நடிகை கஸ்தூரி: பதிலடி கொடுத்தும் விமர்சிக்கும் ரசிகர்கள்

சென்னை: சர்ச்சையை ஏற்படுத்திய பதில்... பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்க்கிறாரா என்ற சமூக வலைதளங்களில் கேட்கப்பட்ட கேள்விக்கு இல்லை என பதிலளித்த நடிகை கஸ்தூரி, அதற்கான காரணத்தை விளக்கியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

ஒரே வீட்டில் நிறைய பேரை வைத்து அவர்களின் செயற்கையான உணர்வுகளைப் பார்க்க நான் விரும்பவில்லை. இதுபோன்ற நிகழ்ச்சிகளை நான் பார்ப்பதில்லை. எனக்கு நேரமில்லை. குடும்பம், வேலை மற்றும் பொறுப்புகள் உள்ளன என்று கஸ்தூரி கருத்து தெரிவித்துள்ளார். இது பிக்பாஸ் ரசிகர்களை கோபத்தில் ஆழ்த்தியுள்ளது.

kasturi,criticism,questioned,crime,criticism ,கஸ்தூரி, விமர்சனம், கேள்வி எழுப்பியுள்ளார், குற்றம், விமர்சனம்

இதற்கு முன்னர், பிக்பாஸ் மூன்றாவது சீசனில் போட்டியாளராக மாறிய கஸ்தூரி 63வது நாளில் வெளியேற்றப்பட்டார். நிகழ்ச்சியில் பங்கேற்று பணத்தை வாங்கிய கஸ்தூரி இப்போது நிகழ்ச்சியை ஏன் குற்றம் சாட்டுகிறார் என்று சிலர் விமர்சிக்கின்றனர். ஒரு மணி நேரத்திற்கு ரூ.5,000 இப்போது கிடைக்கிறது அல்லவா? என்று சிலர் கடுமையாக விமர்சிக்கின்றனர்.

இதற்கு கஸ்தூரி தக்க பதிலடி கொடுத்துள்ளார். உங்களை இப்படித்தான் குடும்பத்தினர் வளர்க்கிறார்களா? என்று கஸ்தூரி தன்னை விமர்சித்தவரை நோக்கி கேள்வி எழுப்பியுள்ளார். கஸ்தூரிக்கு ஆதரவாகவும், குற்றம் சாட்டவும் பலரும் முன் வருகின்றனர்.

Tags :
|