Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • ரஜினிகாந்த் அரசியல் விவகாரம் தொடர்பாக கமல் பாணியில் கருத்து கூறிய நடிகை கஸ்தூரி

ரஜினிகாந்த் அரசியல் விவகாரம் தொடர்பாக கமல் பாணியில் கருத்து கூறிய நடிகை கஸ்தூரி

By: Monisha Sat, 31 Oct 2020 7:09:59 PM

ரஜினிகாந்த் அரசியல் விவகாரம் தொடர்பாக கமல் பாணியில் கருத்து கூறிய நடிகை கஸ்தூரி

ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா? மாட்டாரா? என்பது குறித்து கமல் பாணியில் நடிகை கஸ்தூரி கருத்து கூறி பரபரப்பை ஏற்படுதியுள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் அரசியலுக்கு வருவாரா? மாட்டாரா? என்பது குறித்த வாத, விவாதங்கள் தற்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது. பல செய்தி சேனல்கள் இதுகுறித்து விவாதத்தை நடத்தி வருகின்றன. பெரும்பாலானோர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரமாட்டார் என்றே கருத்து வருகின்றனர்.

குறிப்பாக கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் ரஜினிகாந்த் பதிவு செய்த டுவிட்டில் இருந்து அவர் அரசியலுக்கு வர வாய்ப்பில்லை என்று அவரது ரசிகர்களே சோகமாக பதிவு செய்து வருகின்றனர்.

kasturi,rajinikanth,politics,viral,twitter ,கஸ்தூரி,ரஜினிகாந்த்,அரசியல்,வைரல்,டுவிட்டர்

ஆனால் இன்னும் ஒருசிலரோ வரும் பிப்ரவரி மாதம் திடீரென ரஜினியின் அரசியல் அறிவிப்பு வரும் என இன்னும் நம்பிக்கையுடன் உள்ளனர். இந்த நிலையில் நடிகையும் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவருமான கஸ்தூரி ரஜினி அரசியலுக்கு வருவாரா? என்பதை தசாவதாரம் கமல் பாணியில் தனது சமூக வலைத்தளத்தில் கூறியுள்ளார்.

"ரஜினிகாந்த் வருவாருன்னு நினைக்கல, வந்தா நல்லாயிருக்கும்ன்னு நினைகிறேன்" என்று பதிவு செய்திருக்கும் கஸ்தூரியின் டுவிட் தற்போது வைரலாகி வருகிறது

Tags :
|