Advertisement

குஷ்பு கட்சி மாறியதை கிண்டல் அடித்து பதிவிட்ட நடிகை கஸ்தூரி

By: Nagaraj Thu, 15 Oct 2020 9:16:43 PM

குஷ்பு கட்சி மாறியதை கிண்டல் அடித்து பதிவிட்ட நடிகை கஸ்தூரி

குஷ்பு பாஜகவில் சேர்ந்தது குறித்து, 'எனக்கு என்னமோ கவுண்டமணி மீமும் வடிவேலு மீமும் தான் நினைவுக்கு வருகிறது. எந்த ரெண்டு மீமுணு கரெக்டா சொல்லுங்க' என பதிவிட்டு சர்ச்சையை கிளப்பியுள்ளார் கஸ்தூரி.

நடிகை குஷ்பூ காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் அதிகாரபூர்வமாக தன்னை இணைத்துக் கொண்டார். இந்தச் செய்தியை அறிந்த பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், திரையுலக பிரமுகர்களும் தங்களுடைய கருத்தை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பாஜகவில் குஷ்பு இணைந்தது குறித்து நடிகை கஸ்தூரி குஷ்புவை கலாய்க்கும் விதமாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.

kasturi,kalaippu,khushbu,joined in baja,memes ,கஸ்தூரி, கலாய்ப்பு, குஷ்பு, பாஜவில் இணைந்தது, மீம்ஸ்

அதாவது குஷ்பு தற்போது பாஜகவில் சேர்ந்ததை குறித்து, 'எனக்கு என்னமோ கவுண்டமணி மீமும் வடிவேலு மீமும் தான் நினைவுக்கு வருகிறது. எந்த ரெண்டு மீமுணு கரெக்டா சொல்லுங்க' என பதிவிட்டு சர்ச்சையை கிளப்பியுள்ளார் கஸ்தூரி.

மேலும் இந்த பதிவிற்கு பலர் தங்களுடைய கருத்துக்களையும், ஏராளமான மீம்ஸ்களையும் கமெண்ட் பகுதியில் பதிவிட்டு வருகின்றனர்.

அந்த கமெண்ட் பகுதியில் 'அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா' என்ற மீமையும், வடிவேலுவின் 'அது வேற வாய் இது நாற வாய்' என்ற மீமையும் ஏராளமானோர் குறிப்பிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் குஷ்பு பாஜகவில் இணைந்ததை சக நடிகையான கஸ்தூரி தனது டுவிட்டர் பக்கத்தில் தாறுமாறாய் கலாய்த்து இருப்பது வைரலாகி வருகிறது.

Tags :