Advertisement

குஷ்பு பாஜகவில் இணைந்ததை கலாய்த்த சக நடிகை கஸ்தூரி!

By: Monisha Tue, 13 Oct 2020 12:04:49 PM

குஷ்பு பாஜகவில் இணைந்ததை கலாய்த்த சக நடிகை கஸ்தூரி!

நடிகை குஷ்பு நேற்று மதியம் பாஜகவில் அதிகாரப்பூர்வமாக தன்னை இணைத்துக் கொண்டார். குஷ்புவின் பாஜக இணைப்பு குறித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தங்களுடைய கருத்தை தெரிவித்து வருகின்றனர். ஒரு சில திரையுலக பிரமுகர்களும் இதுகுறித்து தங்களுடைய கருத்தை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் நடிகை குஷ்பு பாஜகவில் சேர இருப்பதை நேற்று முன்தினம் தனது டுவிட்டரில் தெரிவித்ததையடுத்து, நடிகை கஸ்தூரி "நாளை குஷ்புவின் அதிகாரபூர்வமான அறிக்கைக்காக காத்திருக்கிறேன்" என்று கூறியிருந்தார்.

khushboo,bjp,kasturi,politics,twitter ,குஷ்பு,பாஜக,கஸ்தூரி,அரசியல்,டுவிட்டர்

இந்த நிலையில் நேற்று குஷ்பு பாஜகவில் சேர்ந்ததை அடுத்து "எனக்கென்னமோ கவுண்டமணி மீமும் வடிவேலு மீமும் நினைவுக்கு வருகிறது. எந்த ரெண்டு மீம் சொல்லுங்க பாப்போம்?" என்று பதிவு செய்துள்ளார்.

கஸ்தூரியின் இந்த பதிவுக்கு கமெண்ட் பகுதிகளில் ஏராளமானோர் மீம்ஸ்களை பதிவு செய்து வருகின்றனர். கவுண்டமணியின் 'அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா' என்ற மீம் மற்றும் வடிவேலுவின் 'அது வேற வாய் இது நாற வாய்' என்ற மீமையும் பெரும்பாலானோர் குறிப்பிட்டு வருகின்றனர்.

குஷ்பு பாஜகவில் இணைந்ததை சக நடிகை கஸ்தூரி தனது டுவிட்டர் பக்கத்தில் கலாய்த்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags :
|