Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • வித்தியாசமாக நடிகர் விஜய்க்கு பிறந்த நாள் வாழ்த்து கூறிய நடிகை கீர்த்தி சுரேஷ்

வித்தியாசமாக நடிகர் விஜய்க்கு பிறந்த நாள் வாழ்த்து கூறிய நடிகை கீர்த்தி சுரேஷ்

By: Monisha Tue, 23 June 2020 1:16:58 PM

வித்தியாசமாக நடிகர் விஜய்க்கு பிறந்த நாள் வாழ்த்து கூறிய நடிகை கீர்த்தி சுரேஷ்

தமிழ்த் திரையுலகின் முன்னணி நாயகனாக வலம் வருபவர் விஜய். அவர் நேற்று (ஜூன் 22) தனது பிறந்த நாளைக் கொண்டாடினார். கொரோனா அச்சுறுத்தலால் பிறந்த நாள் கொண்டாட்டங்களைத் தவிர்க்குமாறு விஜய் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதனால் சமூக வலைதளத்தில் பிரத்யேகமாக போஸ்டர் வடிவமைப்புகளை வெளியிட்டு விஜய் ரசிகர்கள் கொண்டாடினர்.

இந்நிலையில் விஜய்யுடன் 'பைரவா' மற்றும் 'சர்கார்' ஆகிய இரண்டு படங்களிலும் நாயகியாக நடித்த கீர்த்தி சுரேஷ் வீடியோ மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த வீடியோ தற்போது ட்விட்டர் தளத்தில் வைரலாகி வருகிறது.

actor vijay,birthday,greeting,actress keerthi suresh,violin ,நடிகர் விஜய்,பிறந்த நாள்,வாழ்த்து,நடிகை கீர்த்தி சுரேஷ்,வயலின்

ஏனென்றால், விஜய் நடிப்பில் வெளியாகவுள்ள 'மாஸ்டர்' படத்தில் இடம்பெற்றுள்ள 'குட்டி ஸ்டோரி' பாடல் மிகவும் பிரபலம். அந்தப் பாடலின் ஒரு பகுதியை வயலினில் வாசித்து, விஜய்க்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தனது ட்விட்டர் தளத்தில் 1 நிமிடம் 22 விநாடிகள் கொண்ட வயலின் வாசிப்பு வீடியோவைப் பதிவேற்றி "லைஃப் இஸ் வெரி ஷார்ட் நண்பா.. ஆல்வேஸ் பி ஹேப்பி. இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் விஜய் சார். உங்களுடைய பிறந்த நாளுக்கு எனது சிறிய பரிசு" என்று பதிவிட்டுள்ளார் கீர்த்தி சுரேஷ்.

Tags :