- வீடு›
- பொழுதுபோக்கு›
- நடிகை கீர்த்தி சுரேஷின் மிஸ் இந்தியா திரைப்படத்தின் புது அப்டேட்!
நடிகை கீர்த்தி சுரேஷின் மிஸ் இந்தியா திரைப்படத்தின் புது அப்டேட்!
By: Monisha Mon, 06 July 2020 11:05:44 AM
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்த ’பெண்குயின்’ திரைப்படம் சமீபத்தில் ஓடிடியில் வெளியானது. இந்த நிலையில் அவருடைய அடுத்தப் படமும் விரைவில் ரிலீசுக்கு தயாராக உள்ளதாக கூறப்படுகிறது.
கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'மிஸ் இந்தியா'. தமிழ் உள்பட நான்கு மொழிகளில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே முடிவடைந்த நிலையில் தற்போது படக்குழுவினர் விறுவிறுப்பாக போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் இசையமைப்பாளர் எஸ்.தமன் அவர்கள் தனது சமூக வலைத்தளத்தில் 'மிஸ் இந்தியா' படத்தின் பின்னணி இசை பணிகளை தொடங்கி விட்டதாகவும், விரைவில் அந்த பணிகளை முடித்து விடுவதாகவும் அறிவித்துள்ளார்.
மேலும் 'மிஸ் இந்தியா' திரைப்படத்தின் முதல் சிங்கிள் பாடல் ஏற்கனவே வெளியாகி ஹிட்டான நிலையில் அடுத்த பாடலை விரைவில் எதிர் பாருங்கள் என்றும் எஸ்.தமன் தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார்
ஈஸ்ட் கோஸ்ட் புரடொக்சன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தை நரேந்திர நாத் இயக்கியுள்ளார். கீர்த்திசுரேஷ் முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்த படத்தில் ஜெகபதி பாபு, நதியா, நவீன் சந்திரா, ராஜேந்திர பிரசாத், நரேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.