Advertisement

நடிகை குஷ்பு விபத்தில் சிக்கி காயம்

By: vaithegi Sun, 29 Jan 2023 11:03:50 AM

நடிகை குஷ்பு விபத்தில் சிக்கி காயம்

குஷ்புக்கு காலில் காயம் ....... தமிழ் திரை உலகில் 1990-களில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த குஷ்பு தற்போது குணசித்திர வேடங்களில் நடித்து கொண்டு வருகிறார். கடைசியாக ரஜினிகாந்தின் 'அண்ணாத்த' படத்தில் நடித்து இருந்தார். பா.ஜனதா கட்சியில் இணைந்து அரசியல் பணிகளிலும் தீவிரமாக ஈடுபட்டு கொண்டு வருகிறார்.

இதையடுத்து சமூக வலைத்தளத்தில் அரசியல் மற்றும் சமூக கருத்துகளையும் அடிக்கடி பகிர்ந்து கொண்டு வருகிறார். இந்நிலையில் குஷ்பு ஒரு பயணத்துக்கான ஏற்பாடுகளில் இருந்தபோது விபத்தில் சிக்கி காயம் அடைந்து விட்டதாக தெரிவித்து தனது காலில் கட்டுப்போட்டுள்ள புகைப்படத்தை வலைத்தளத்தில் வெளியிட்டு உள்ளார்.

injury,rash ,காயம்,குஷ்பு

அதில், ''ஒரு விபத்து அன்றாட வாழ்வை சீர்குலைத்து வலியை ஏற்படுத்தும்போது ஒருவர் என்ன செய்வார். மற்றவர்கள் பற்றி எனக்கு தெரியாது. ஆனால் எனது பயணம் நிற்காமல் தொடரும். இலக்கை அடையும் வரை நிறுத்தமாட்டேன்'' என பதிவு ஒன்றையும் பகிர்ந்துள்ளார்.

காலில் காயமுற்று கட்டுப்போட்டுள்ள நடிகை குஷ்பு புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அவர் விரைவில் குணம் அடையை வாழ்த்து தெரிவித்து கொண்டு வருகிறார்கள்.

Tags :
|