Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • நடிகை லாஸ்லியா கவின் திருமணம் மற்றும் அவருடைய வளர்ச்சியை பற்றி மனம் திறந்துள்ளார்

நடிகை லாஸ்லியா கவின் திருமணம் மற்றும் அவருடைய வளர்ச்சியை பற்றி மனம் திறந்துள்ளார்

By: vaithegi Tue, 10 Oct 2023 3:19:45 PM

நடிகை லாஸ்லியா கவின் திருமணம் மற்றும் அவருடைய வளர்ச்சியை பற்றி மனம் திறந்துள்ளார்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்தபோது இவருக்கும் லாஸ்லியாவுக்கும் இடையே காதல் ஏற்பட்டது என்பது அனைவர்க்கும் தெரிந்த ஒன்று தான். அதன் பிறகு தனிப்பட்ட சில கரணங்கள் இருவரும் பிரிந்துவிட்டனர். அதை தொடர்ந்து நடிகர் கவின் வேறொரு பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

இந்த நிலையில், பேட்டி ஒன்றில் பேசிய நடிகை லாஸ்லியா கவின் திருமணம் பற்றியும் அவருடைய வளர்ச்சியை பற்றியும் மனம் திறந்து பேசியுள்ளார்.இதனை அடுத்து இது தொடர்பாக பேசிய அவர் ” கவினுக்கு திருமணம் முடிந்துள்ளது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

அதைப்போன்று அவர் தொடர்ச்சியாக நல்ல படங்களில் நடித்து வருவதை பார்க்கும்போது இன்னும் மகிழ்ச்சியாக இருக்கிறது. தொடர்ச்சியாக வெற்றி படங்களில் நடித்து அவர் முன்னணி நடிகராக வளர்ந்து வருவதை பார்க்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. ஒரு சிலர் முன்பு நடந்த விஷயங்களை வைத்து சேர்த்து வைத்து பேசிக்கொண்டு தான் இருப்பார்கள்.

actress lazlias marriage,gavin ,நடிகை லாஸ்லியா ,கவின் திருமணம்

அதைப்பற்றி எனக்கு கவலை இல்லை அவர்களுக்கு எல்லாம் பதில் சொல்லிக்கொண்டு இருக்கவேண்டும் என்கிற அவசியமும் இல்லை. கிட்டத்தட்ட 4 வருடங்கள் ஆகிவிட்டது இன்னும் பழசை போட்டு இப்போது இருக்கும் வாழ்க்கையுடன் சேர்த்து பேசுவது என்னை இதுவரை பாதிக்கவில்லை அவரையும் அது பாதித்திருக்காது என்று நான் நம்புகிறேன்.

எனக்கு இதை பற்றி எந்த கவலையும் இல்லை அவர் சந்தோசமாக இருக்கிறார் நானும் சந்தோசமாக இருக்கிறேன்” என்றும் நடிகை லாஸ்லியா தெரிவித்து உள்ளார்.

Tags :