Advertisement

மீண்டும் நயன்தாராவை சீண்டியுள்ள நடிகை மாளவிகா மோகனன்

By: Nagaraj Mon, 13 Feb 2023 08:03:28 AM

மீண்டும் நயன்தாராவை சீண்டியுள்ள நடிகை மாளவிகா மோகனன்

சென்னை: நயன்தாராவின் பதிலடியை பொறுக்க முடியாமல் மாளவிகா மோகனன் இப்படி பேசி இருக்கிறார் என்று நெட்டிசன்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

மலையாள நடிகையான மாளவிகா மோகனன், தமிழில் பேட்ட, மாஸ்டர், மாறன் போன்ற படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பேமஸ் ஆனார். இவர் நடிப்பில் தற்போது கிறிஸ்டி என்கிற மலையாள திரைப்படம் தயாராகி உள்ளது. இப்படம் விரைவில் ரிலீசாக உள்ளது.

இதற்கான புரமோஷன் பணிகளில் படுபிசியாக உள்ள மாளவிகா பல்வேறு பேட்டிகளை கொடுத்து வருகிறார். அந்த வகையில் மலையாள ஊடகம் ஒன்றிற்கு மாளவிகா அளித்த பேட்டி ஒன்று தற்போது சர்ச்சையில் சிக்கி உள்ளது.

அந்த பேட்டியில் லேடி சூப்பர்ஸ்டார் என்கிற பட்டம் குறித்து பேசி இருக்கிறார் மாளவிகா. அதன்படி ஹீரோயின்களை லேடி சூப்பர்ஸ்டார் என்று அழைக்கப்படுவதில் தனக்கு சுத்தமாக விருப்பம் இல்லை என தெரிவித்துள்ள அவர். ஹீரோக்களை எப்படி சூப்பர்ஸ்டார் என்று அழைக்கிறோமோ, அதேபோல் ஹீரோயின்களையும் சூப்பர்ஸ்டார் என்றே அழைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

interview,prepared,promotional,releasing, ,சூப்பர்ஸ்டார், திரைப்படம், மலையாள, மாளவிகா

கத்ரீனா கைஃப், ஆலியா பட், தீபிகா படுகோன் போன்றவர்களை லேடி சூப்பர்ஸ்டார் என்று அழைப்பதில்லை. அவர்கள் எல்லாம் சூப்பர்ஸ்டார் தான் என்று பேசி உள்ளார்.

நயன்தாரா மீதுள்ள பொறாமையில் தான் மாளவிகா மோகனன் இப்படி பேசி உள்ளதாக ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். இதுவரை சினிமாவில் லேடி சூப்பர்ஸ்டார் என்று அழைக்கப்படுவது நயன்தாரா மற்றும் மஞ்சு வாரியர் மட்டும்தான்.

ஆனால் அவர்களது பெயரை குறிப்பிடாமல் பாலிவுட் நடிகைகளின் பெயரைச் சொல்லி மாளவிகா மோகனன் பேசி உள்ளதை பார்த்த ரசிகர்கள், நயன் மீது உங்களுக்கு இன்னும் பொறாமை போகவில்லையா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

ஏற்கனவே தன்னை பற்றி இவர் கூறிய கருத்துக்கு தக்க பதிலடி கொடுத்தார் நயன்தார். இந்த பதிலடியை தாங்கிக் கொள்ள முடியாமல் தான் மாளவிகா மோகனன் தற்போது லேடி சூப்பர்ஸ்டார் பற்றி பேசி இருப்பதாக நெட்டிசன்கள் அவரை சாடி வருகின்றனர்.

Tags :