Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • நடிகர் விக்ரமும் இணைந்து செய்திருந்த இசை ஆல்பம் குறித்து நடிகை மீனா தகவல்

நடிகர் விக்ரமும் இணைந்து செய்திருந்த இசை ஆல்பம் குறித்து நடிகை மீனா தகவல்

By: Nagaraj Mon, 19 June 2023 09:44:40 AM

நடிகர் விக்ரமும் இணைந்து செய்திருந்த இசை ஆல்பம் குறித்து நடிகை மீனா தகவல்

சென்னை: நடிகர் விக்ரமும் நடிக்காத போதும் அவருடன் இணைந்து செய்திருந்த இசை ஆல்பமும் வெளியாகவில்லை என்று நடிகை மீனா தெரிவித்துள்ளார்.

பிரபலமான நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் நடிகை மீனா. இவர் 1982ல் வெளியான 'நெஞ்சங்கள்' என்ற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி 20க்கும் மேற்பட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.

அதைத் தொடர்ந்து, 1990ல் 'நவயுகம்' என்ற தெலுங்கு படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி, பின்னர் தெலுங்கு படங்களில் அதிகமாகவும், இடையிடையே தமிழ்ப்படங்களிலும் கதாநாயகியாக நடித்து வந்தார்.

பின்னர் 1993ல் சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளியான 'எஜமான்' திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. தொடர்ந்து 'சேதுபதி ஐபிஎஸ்', 'ராஜகுமாரன்', 'வீரா' என பிரபல ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்துவந்தார்.

actress meena,seeyan vikram,happiness,reception,assignments,album ,நடிகை மீனா, சீயான் விக்ரம், மகிழ்ச்சி, வரவேற்பு, பணிகள், ஆல்பம்

1995-2000 காலகட்டத்தில் ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம் வந்தார். சமீபத்தில் ஒரு இசை ஆல்பம் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு சில விஷயங்களை பகிர்ந்துகொண்டார்.

அப்போது நடிகை மீனா, 'காதலிசம்' என்ற இசை ஆல்பத்தில் விக்ரமுடன் இணைந்து பணியாற்றிய விஷயத்தை பகிர்ந்துகொண்டார். ஆனால் சூழ்நிலை காரணமாக அப்போது அந்த ஆல்பம் வெளியிடப்படாமல் அப்படியே கைவிடப்பட்டதாக கூறியுள்ளார்.

அந்த சமயம் தமிழ் ஆல்பங்கள் பிரபலமாக இல்லை என்றும், அப்போது இதை மார்க்கெட் செய்வது எப்படி என்பது குறித்து தெரியவில்லை என்றும், அதற்குப்பதிலாக அதை நிறுத்தி வைக்க முடிவு செய்ததாகவும் அவர் கூறினார்.

ஆனால், இப்போதைய தலைமுறையினர் இதற்கான பணிகளை சரியாக செய்வதுடன், ரசிகர்களும் அதை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறார்கள் என்று கூறியுள்ளார்.

Tags :