Advertisement

ரூ.50 கோடி மதிப்பில் சொந்தமாக ஜெட் விமானம் வைத்துள்ள நடிகை நயன்தாரா

By: Nagaraj Fri, 29 Sept 2023 10:34:11 AM

ரூ.50 கோடி மதிப்பில் சொந்தமாக ஜெட் விமானம் வைத்துள்ள நடிகை நயன்தாரா

சென்னை: நடிகை நயன்தாரா சொந்தமாக ஜெட் விமானம் வைத்துள்ளார். இதன் மதிப்பு ரூ. 50 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது.

சினிமாவில் ஒரு படம் நடித்தால் வழக்கமாக செய்ய வேண்டிய விஷயங்கள் உள்ளது. அதனை செய்து காட்டாமலும் சக்சஸ் காட்டி வருகிறார் நடிகை. ஐயா படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் தெலுங்கு, மலையாளம் என 80க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

இப்போது அட்லீ ஷாருக்கானை வைத்து இயக்கிய ஜவான் படத்தின் மூலம் பாலிவுட்டிலும் கால் பதித்துள்ளார். படங்களை நடிப்பதை தாண்டி நயன்தாரா நிறைய தொழில்களையும் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

actress nayanthara,jet,value,luxury cars,information ,நடிகை நயன்தாரா, ஜெட் விமானம், மதிப்பு, சொகுசுகார்கள், தகவல்கள்

நடிகை நயன்தாரா பிரைவேட் ஜெட் விமானத்தை வைத்துள்ளார், அதன் சில புகைப்படங்களும் இதற்கு முன் ஏற்கெனவே வெளியாகியுள்ளது. ஜெட் விமானத்தை வைத்திருக்கும் எலைட் நடிகைகளின் குழுவில் நயன்தாராவும் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நடிகை நயன்தாரா வைத்திருக்கும் ஜெட் விமானத்தின் மதிப்பு ரூ. 50 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது. ரூ.1.76 கோடி மதிப்புள்ள BMW 7 சீரிஸ், ரூ.1 கோடி மதிப்புள்ள Mercedes GLS350D மற்றும் BMW 5 சீரிஸ் போன்ற பல உயர் ரக சொகுசு கார்களை அவர் சொந்தமாக வைத்துள்ளார்.

Tags :
|
|