Advertisement

நடிகை நிஹரிகா திருமண நிச்சயதார்த்தம்

By: Monisha Sat, 15 Aug 2020 11:26:07 AM

நடிகை நிஹரிகா திருமண நிச்சயதார்த்தம்

ஐதராபாத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடிகை நிஹரிகா திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது.

தமிழில் விஜய் சேதுபதி, கவுதம் கார்த்திக்குடன் 'ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்' படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் நிஹரிகா. தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். இவர் பிரபல தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியின் தம்பி நாகபாபுவின் மகள் ஆவார். தற்போது தமிழில் அசோக் செல்வன் ஜோடியாக புதிய படத்தில் நடித்து வருகிறார். நிஹரிகாவையும் நடிகர் பிரபாசையும் இணைத்து ஏற்கனவே கிசுகிசுக்கள் பரவின. இதனை இருவரும் மறுத்தனர்.

இந்த நிலையில் நிஹரிகாவுக்கும் ஐதராபாத்தை சேர்ந்த என்ஜினீயர் சைதன்யா என்பவருக்கும் திருமணம் நடத்த பெற்றோர்கள் முடிவு செய்தனர்.

actress niharika,engagement,chaitanya,chiranjeevi,ramcharan teja ,நடிகை நிஹரிகா,நிச்சயதார்த்தம்,சைதன்யா,சிரஞ்சீவி, ராம்சரண் தேஜா

சமீபத்தில் மணமகனின் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் நிஹரிகா வெளியிட்டு திருமணத்தை உறுதிப்படுத்தினார்.

இந்த நிலையில் நிஹரிகா சைதன்யா திருமண நிச்சயதார்த்தம் கொரோனா ஊரடங்கில் ஐதராபாத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடந்தது. இதில் நடிகர்கள் சிரஞ்சீவி, ராம்சரண் தேஜா, அல்லு அர்ஜூன் உள்பட குடும்பத்தினர் கலந்து கொண்டனர். டிசம்பர் மாதம் திருமணத்தை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

Tags :