Advertisement

நடிகை நிஹரிகாவின் திருமண தேதி அறிவிப்பு

By: Monisha Sat, 07 Nov 2020 6:06:59 PM

நடிகை நிஹரிகாவின் திருமண தேதி அறிவிப்பு

சமீபத்தில் நிச்சயதார்த்தம் முடிந்த நடிகை நிஹரிகாவின் திருமண தேதி மற்றும் நடைபெறும் இடம் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழில் விஜய் சேதுபதியின் 'ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்' படத்தில் கதாநாயகியாக நடித்தவர் நிஹரிகா. தற்போது அசோக் செல்வன் ஜோடியாக புதிய படத்தில் நடிக்கிறார். தெலுங்கில் ஒக்க மனசு, ஹேப்பி வெட்டிங், சூர்ய காந்த, சைரா நரசிம்ம ரெட்டி உள்ளிட்ட படங்களில் நடித்து முன்னணி நடிகையாக இருக்கிறார்.

niharika,marriage,date,place,hyderabad ,நிஹரிகா,திருமணம்,தேதி,இடம்,ஐதராபாத்

இவர் முன்னணி தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியின் தம்பி நாகபாபுவின் மகள். நிஹரிகாவுக்கும் ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றும் வெங்கட சைதன்ய ஜோனாலகாடு என்பவருக்கும் திருமணம் முடிவானது.

கடந்த ஆகஸ்டு மாதம் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. அடுத்த மாதம் (டிசம்பர்) 9-ந்தேதி ஐதராபாத்தில் இவர்கள் திருமணம் நடக்க உள்ளதாக தற்போது அறிவிக்கப்பட்டு உள்ளது. கொரோனா அச்சுறுத்தலால் நெருங்கிய உறவினர்களை மட்டுமே திருமணத்துக்கு அழைக்க முடிவு செய்துள்ளனர்.

Tags :
|
|