Advertisement

கவின் ஜோடியாக நடிக்கிறாராம் நடிகை ப்ரீத்தி அஸ்ரானி

By: Nagaraj Thu, 11 May 2023 8:19:15 PM

கவின் ஜோடியாக நடிக்கிறாராம் நடிகை ப்ரீத்தி அஸ்ரானி

சென்னை: அயோத்தி படத்தில் நடித்துள்ள நடிகை ப்ரீத்தி அஸ்ரானி அடுத்து கவின் ஜோடியாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அறிமுக இயக்குனர் மந்த்ர மூர்த்தி இயக்கத்தில் சசிகுமார் நடித்த ‘அயோத்தி’ திரைப்படம் மார்ச் 3ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தில் ப்ரீத்தி அஸ்ரானி மற்றும் ‘குக் வித் கோமாலி’ புகழ் யஷ்பால் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

மனித நல்லிணக்கம் மற்றும் மத நல்லிணக்கம் பற்றி பேசப்பட்ட இப்படம் பலரது பாராட்டுகளைப் பெற்றது. இப்படத்தில் அயோத்தியாக நடித்த நடிகை ப்ரீத்தி அஸ்ரானி பலராலும் பாராட்டப்பட்டார். 2020ல் ‘பிரஷர் குக்கர்’ என்ற தெலுங்குப் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.

film,kavin,movie,gavin,jody ,குக் வித் கோமாலி, சசிகுமார், பட நடிகை, கவின், ஜோடி

சில படங்களில் முக்கிய வேடத்தில் நடித்தாலும், அயோத்திதான் அவருக்கு திருப்புமுனையாக அமைந்தது. இந்நிலையில் நடிகை ப்ரீத்தி அஸ்ரானி அடுத்து கவின் ஜோடியாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடன இயக்குனர் சதீஷ் இயக்கத்தில் நடிகர் கவின் புதிய படத்தில் நடிக்கவுள்ளதாகவும், இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. அயோத்தியில் கதாநாயகியாக ப்ரீத்தி அஸ்ரானி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், ‘கிஸ்’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் குஷ்பு முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளதாக பட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Tags :
|
|
|
|