- வீடு›
- பொழுதுபோக்கு›
- விஜய் சேதுபதி படத்தில் நடிக்க தேர்வான நடிகை ராதிகா ஆப்தே
விஜய் சேதுபதி படத்தில் நடிக்க தேர்வான நடிகை ராதிகா ஆப்தே
By: Nagaraj Sun, 11 June 2023 11:20:26 PM
சென்னை: விஜய் சேதுபதி நடிக்கும் மேரி கிறிஸ்துமஸ் படத்தில் நடிகை ராதிகா ஆப்தே நடிக்க உள்ளார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
தமிழ், இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் தயாராகி வரும் மேரி கிறிஸ்துமஸில் விஜய் சேதுபதி ஜோடியாக கத்ரீனா கைஃப் நடிக்கிறார். இந்தப் படத்தை ஸ்ரீராம் ராகவன் இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இப்படத்தில் மும்பை செல்லும் தமிழ் பையனாக விஜய் சேதுபதி நடிக்கவுள்ளதாகவும் அவர் தமிழில் கதை சொல்லி நடிப்பார் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில், மேரி கிறிஸ்துமஸ் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க ராதிகா ஆப்தேவும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
விஜய் சேதுபதி, ராதிகா ஆப்தே நடிக்கும் காட்சிகள் விரைவில் படமாக்கப்பட உள்ளன. ராதிகா ஆப்தே ஏற்கனவே தமிழில் ரஜினிக்கு ஜோடியாக கபாலி, கார்த்திக்கு ஜோடியாக ஆல் இன் ஆல் அழகுராஜா போன்ற படங்களில் நடித்துள்ளார். இவர் இந்தியில் பிரபலமான நடிகை.
ஶ்ரீராம் ராகவன் இயக்கிய பதிலாபூர், அந்தா தூண் ஆகிய படங்களில் ராதிகா ஆப்தே ஏற்கனவே நடித்து இருந்தார். அந்த படங்களுக்கு வரவேற்பு கிடைத்தது.