Advertisement

பிறந்த நாளை ஒட்டி திருப்பதி கோயிலுக்கு வந்த நடிகை ரோஜா

By: Nagaraj Thu, 17 Nov 2022 9:25:56 PM

பிறந்த நாளை ஒட்டி திருப்பதி கோயிலுக்கு வந்த நடிகை ரோஜா

திருப்பதி: பிறந்தநாளை முன்னிட்டு இன்று திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகை ரோஜா சாமி தரிசனம் செய்தார். இந்த புகைப்படங்கள் வெளியாகி செம வைரலாகி வருகிறது.

ஆந்திர சுற்றுலாத்துறை மந்திரியும், நடிகையுமான ரோஜா இன்று தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்த நிலையில் தன்னுடைய பிறந்தநாளை முன்னிட்டு இன்று திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகை ரோஜா சாமி தரிசனம் செய்தார்.

swami darshanam,actress roja,birthday,greetings,tirupati ,சுவாமி தரிசனம், நடிகை ரோஜா, பிறந்தநாள், வாழ்த்துக்கள், திருப்பதி

அவருக்கு தேவஸ்தானம் சார்பில் பிரசாதங்கள் வழங்கப்பட்டன. தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், ஏழுமலையானை எத்தனை முறை வழிபட்டாலும் ஆசை தீராது. மீண்டும், மீண்டும் மக்களுக்கு சேவை செய்ய வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்று இறைவனிடம் வேண்டிக் கொண்டதாக தெரிவித்தார்.

மேலும் தன்னுடைய மகன், மகள் ஆகியோர் விருப்பப்பட்டு நடிப்புத் தொழிலுக்கு வந்தால் மிகவும் மகிழ்ச்சி அடைவேன் என்றும் தெரிவித்தார். சாமி தரிசனம் செய்ய வந்த ரோஜாவுக்கு தேவஸ்தான அதிகாரிகள், கோவில் ஊழியர்கள், கட்சி தொண்டர்கள், பொதுமக்கள் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.

Tags :