Advertisement

ஜிம்மில் கடும் உடற்பயிற்சி மேற்கொள்ளும் நடிகை சமந்தா

By: Nagaraj Mon, 20 Mar 2023 11:12:09 PM

ஜிம்மில் கடும் உடற்பயிற்சி மேற்கொள்ளும் நடிகை சமந்தா

சென்னை: நடிகை சமந்தா ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் புகைப்படம் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வைரலாகி வருகிறது.

தெலுங்கு சினிமாவின் முன்னணி இயக்குனர் குணசேகர். பல வெற்றிப் படங்களை இயக்கிய இவர் தற்போது காளிதாசன் எழுதிய புராணத்தில் வரும் சகுந்தலம் என்ற கதாபாத்திரத்தை மையமாக வைத்து ஒரு புராணப் படத்தை எடுக்கவுள்ளார்.

இப்படத்தில் சகுந்தலா கதாபாத்திரத்தில் நடிக்க சமந்தாவும், மலையாள நடிகர் தேவ் மோகனும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இப்படம் நவம்பர் மாதமே வெளியாகும் என அறிவிக்கப்பட்டது, ஆனால் பின்னர் பிப்ரவரி 17ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் அந்த தேதியில் படம் வெளியாகவில்லை.

actress,samantha,work out , சகுந்தலம், சமந்தா, ஜிம்

தற்போது இப்படம் ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சகுந்தலம் 5 மொழிகளில் பான் இந்தியா ரிலீஸ் ஆகும்.

இந்நிலையில் இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள தொடங்கியுள்ளார் சமந்தா. இந்நிலையில் அவர் ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் புகைப்படம் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வைரலாகி வருகிறது.

Tags :