Advertisement

உடற்பயிற்சி செய்யும் புதிய புகைப்படங்களை பதிவு செய்த நடிகை சமந்தா!

By: Monisha Thu, 24 Sept 2020 12:22:11 PM

உடற்பயிற்சி செய்யும் புதிய புகைப்படங்களை பதிவு செய்த நடிகை சமந்தா!

தென்னிந்திய மொழித் திரைப்படங்களில் பிஸியாக இருக்கும் நடிகை சமந்தா உடற்பயிற்சி செய்யும் புதிய புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.

தமிழ் தெலுங்கு உட்பட தென்னிந்திய மொழித் திரைப்படங்களில் பிஸியாக இருக்கும் நடிகைகளில் ஒருவர் சமந்தா. இவர் தற்போது 'தி ஃபேமிலி மேன்' என்ற வெப்தொடரில் நெகட்டிவ் வேடத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாக இருக்கும் காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற திரைப்படத்தில் விஜய் சேதுபதி, நயன்தாராவுடன் நடிக்க உள்ளார்.

இந்த நிலையில் கொரோனா விடுமுறையை உருப்படியாக கழித்த மிகச் சில நடிகைகளில் சமந்தா ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

actress samantha,gym,photos,viral,web series ,நடிகை சமந்தா,உடற்பயிற்சி,புகைப்படங்கள்,வைரல்,வெப்தொடர்

மொட்டைமாடியில் தோட்டம் அமைப்பது, உடற்பயிற்சி செய்வது குறித்த புகைப்படங்களையும் வீடியோக்களையும் அவர் தனது சமூக வலைதளங்களில் பதிவு செய்து வந்தார் என்பதும் இந்த புகைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது அவர் உடற்பயிற்சி செய்யும் புதிய புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். உங்கள் வலிமையான தசை மற்றும் மோசமான எதிரி உங்கள் மனம்தான் என்றும் அதை நன்கு பயிற்றுவிக்கவும் என்றும் சமந்தா அந்த புகைப்படங்களில் கேப்சனாக தெரிவித்துள்ளார். சமந்தாவின் இந்த புகைப்படம் மற்றும் கேப்சன் பதிவு தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
|
|
|