Advertisement

ரசிகரின் கிண்டலுக்கு தக்க பதிலடி கொடுத்த நடிகை சமந்தா

By: Nagaraj Tue, 03 Jan 2023 10:40:12 PM

ரசிகரின் கிண்டலுக்கு தக்க பதிலடி கொடுத்த நடிகை சமந்தா

சென்னை: ரசிகரின் கிண்டலுக்கு தக்க பதிலடியாக விழுந்து மீண்டும் எழுவது பெண்ணை மேலும் வலிமையாக்குகிறது நண்பரே” என்று பதிலளித்த சமந்தா. மற்றொரு ரசிகர் பதிவிற்கு அனைவரின் பிரார்த்தனையும் எனக்கு மேலும் பலத்தைத் தருகிறது என்று பதிவிட்டுள்ளார்.

தமிழில் கடந்த மாதம் கனெக்ட், ராங்கி, டிரைவர் ஜமுனா, செம்பி, ஓ மை பேய் போன்ற பெண் கதாபாத்திரங்கள் கொண்ட படங்கள் ஒன்றன் பின் ஒன்றாக திரைக்கு வந்து நல்ல வரவேற்பைப் பெற்றன.

திரையரங்குகளில் வைக்கப்பட்டுள்ள இந்தப் படங்களின் பேனர்களை யாரோ ஒருவர் புகைப்படம் எடுத்து, “தமிழ் சினிமா முன்னேற்றப் பாதையில் செல்கிறது” என்று இணையதளத்தில் பகிர்ந்துள்ளார்.

cinema,photo,samantha,someone, ,கதாபாத்திரங்கள், சினிமா, திரையரங்குகளில், படங்கள்

மேலும், “10 வருடங்களுக்கு முன்பு இதுபோன்ற ஒன்றை நாம் கற்பனை செய்திருக்க முடியாது” என்று ஒரு பதிவையும் பதிவிட்டிருந்தார். அதற்கு வேறு ஒரு நபர் பெண்கள் எழுவது விழுவதற்கு தான் என்று நக்கல் அடித்திருந்தார்.

விழுந்து மீண்டும் எழுவது பெண்ணை மேலும் வலிமையாக்குகிறது நண்பரே” என்று ரசிகருக்கு பதிலளித்த சமந்தா. மற்றொரு ரசிகர் பதிவிற்கு பதிலளித்துள்ள சமந்தா, “அனைவரின் பிரார்த்தனையும் எனக்கு மேலும் பலத்தைத் தருகிறது” என்று கூறியுள்ளார்.

Tags :
|
|