Advertisement

படப்பிடிப்பில் நடிகை சமந்தாவிற்கு காயம்... ரசிகர்கள் அதிர்ச்சி

By: Nagaraj Tue, 28 Feb 2023 9:59:23 PM

படப்பிடிப்பில் நடிகை சமந்தாவிற்கு காயம்... ரசிகர்கள் அதிர்ச்சி

சென்னை: படப்பிடிப்பில் நடிகை சமந்தாவிற்கு காயம் ஏற்பட்டுள்ளது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

2010ல் வெளியான பாணா காத்தாடி படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமான சமந்தா, அதன் பிறகு நீதானே என் பொன் வசந்தம், நான் ஈ, தெறி, 24, மெர்சல், உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானார். தெலுங்கில் பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாகவும் உள்ளார்.

சமீபத்தில் அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா படத்தில் ‘ஓ சொல்ரியா மாமா’ பாடலுக்கு நடனமாடி தென்னிந்திய திரையுலகினரை கவர்ந்தார். சில நாட்களுக்கு முன்பு, சமந்தா மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார், மேலும் இந்த நோயிலிருந்து குணமடைய சிறிது காலம் ஆகும் என்றும் தெரிவித்து இருந்தார்.

actress samantha,injury,shooting, ,காயம், நடிகை சமந்தா, படப்பிடிப்பு

இது திரையுலகிலும், ரசிகர்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சிகிச்சை காரணமாக சில மாதங்கள் சினிமாவில் இருந்து ஒதுங்கியிருந்த சமந்தா தற்போது மீண்டும் நடிக்க தொடங்கியுள்ளார். சமந்தா நடித்த வரலாற்றுப் படமான சாகுந்தலம் ஏப்ரல் 14ஆம் தேதி 5 மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகிறது.

விஜய் தேவரகொண்டாவை வைத்து சமந்தா நடிக்கும் ‘குஷி’ படத்தின் படப்பிடிப்பும் தொடங்கியுள்ளது. இந்நிலையில், சமந்தா படப்பிடிப்பு தளத்தில் காயம் அடைந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். சமந்தா கையில் காயங்களுடன் இருக்கும் புகைப்படத்தை ரசிகர்கள் பலரும் இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்

Tags :
|