Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • அமெரிக்கா சென்றுள்ள நடிகை சமந்தா அங்கு நடந்த இந்திய சுதந்திர தின அணிவகுப்பில் பங்கேற்பு

அமெரிக்கா சென்றுள்ள நடிகை சமந்தா அங்கு நடந்த இந்திய சுதந்திர தின அணிவகுப்பில் பங்கேற்பு

By: Nagaraj Wed, 23 Aug 2023 8:31:25 PM

அமெரிக்கா சென்றுள்ள நடிகை சமந்தா அங்கு நடந்த இந்திய சுதந்திர தின அணிவகுப்பில் பங்கேற்பு

அமெரிக்கா: பங்கேற்ற சமந்தா... அமெரிக்காவில் நடந்த இந்திய சுதந்திர தின அணிவகுப்பில் நடிகை சமந்தா பங்கேற்றுள்ளார் என்று தெரிய வந்துள்ளது.

மயோசிடிஸ் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றுள்ள நடிகை சமந்தா அங்கு நடந்த இந்திய சுதந்திர தின அணிவகுப்பில் பங்கேற்றார். இந்திய தேசியக் கொடியை ஏந்தியவாறு அவர் தெருக்களில் கூட்டத்தினருடன் நடந்தார். அவருக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இதில் இந்தி நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் கலந்து கொண்டார். பலர் சமந்தாவுடன் செல்ஃபி எடுத்துக்கொண்டனர். இந்நிகழ்ச்சியில் பேசிய சமந்தா, “இன்று இங்கு வந்திருப்பது உண்மையிலேயே ஒரு மரியாதை. இந்திய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் எவ்வளவு பெரியது என்பதை எனக்கு புரிய வைத்துள்ளீர்கள்.

independence day,india,parade,samantha,usa ,அணிவகுப்பு, அமெரிக்கா, இந்தியா, சமந்தா, சுதந்திர தினம்

இன்று நான் பார்த்த இந்த தருணங்கள் என் வாழ்நாள் முழுவதும் என் மனதில் இருக்கும். இந்த அரிய கவுரவம் எனக்கு கிடைக்கும்படி செய்த ஒவ்வொருவருக்கும் நன்றி. என் ஒவ்வொரு படத்தையும் ஆதரிக்கும் அமெரிக்க மக்களுக்கு நன்றி” என்றார்.

அமெரிக்காவில் ஆண்டுதோறும் மிகவும் பிரமாண்டமாக நடக்கும் இந்திய சுதந்திர தின அணிவகுப்பு நிகழ்ச்சியில் இதற்கு முன்பு அபிஷேக் பச்சன், ராணா, அல்லு அர்ஜுன், அர்ஜுன் ராம் பால், சன்னி தியோல், ரவீனா டாண்டன், தமன்னா ஆகியோர் பங்கேற்று உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
|
|