Advertisement

ஆர்.ஆர்.ஆர் படத்தில் நடிகை ஸ்ரேயா!

By: Monisha Mon, 08 June 2020 1:36:14 PM

ஆர்.ஆர்.ஆர் படத்தில் நடிகை ஸ்ரேயா!

உலக புகழ் பாகுபலி படத்தை இயக்கியவர் இயக்குநர் ராஜமெளலி. தற்போது இவர் இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'இரத்தம் ரணம் ரெளத்திரம்'. இதில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், அலியா பட், அஜய் தேவ்கன் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். 'பாகுபலி' படத்தைப் போலவே இந்தப் படமும் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என அனைத்து மொழிகளிலும் வெளியாகவுள்ளது. இப்படத்தை டிவிவி நிறுவனம் சுமார் 400 கோடி ரூபாய் செலவில் தயாரித்து வருகிறது.

இந்தப் படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு கொரோனா ஊரடங்கினால் பாதிக்கப்பட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் முடிந்தவுடன் இறுதிக்கட்டப் படப்பிடிப்பைத் தொடங்கலாம் என படக்குழு முடிவு செய்துள்ளது. அதற்கான முன்னேற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

director rajamouli,rrr movie,corona curfew,actress shreya ,இயக்குநர் ராஜமெளலி,ஆர்.ஆர்.ஆர் படம்,கொரோனா ஊரடங்கு,நடிகை ஸ்ரேயா

இந்நிலையில் 'ஆர்.ஆர்.ஆர்' படத்தில் நடிக்கவுள்ளதை நடிகை ஸ்ரேயா தனது சமூக வலைதளத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது உறுதி செய்துள்ளார். ராஜமெளலி படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்பதை தெரிவித்ததுடன், இந்தியாவுக்கு வரவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். நடிகை ஸ்ரேயா 'ஆர்.ஆர்.ஆர்' படத்தில் அஜய் தேவ்கானுக்கு மனைவியாக சிறு கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தப் படம் 2021-ம் ஆண்டு ஜனவரி 8-ம் தேதி வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், கொரோனா அச்சுறுத்தலால் வெளியீட்டுத் தேதி மாறும் எனக் கூறப்படுகிறது.

Tags :