- வீடு›
- பொழுதுபோக்கு›
- நடிகை ஸ்ருதிஹாசனின் இளம் வயது வீடியோ சமூக வலைதளங்களில் வைரல்
நடிகை ஸ்ருதிஹாசனின் இளம் வயது வீடியோ சமூக வலைதளங்களில் வைரல்
By: Nagaraj Tue, 25 Apr 2023 7:54:44 PM
சென்னை: நடிகை ஸ்ருதிஹாசன் சிறுவயதில் சிங்கப்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் முதன்முறையாக பேசிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி முன்னணி நடிகர்களாக கலக்கியவர்களின் பட்டியல் மிக நீளம். உதாரணமாக கமல்ஹாசன், விஜய், சிம்பு, மீனா ஆகியோரை சொல்லலாம். அந்த வரிசையில் நடிகர் கமல்ஹாசனின் மகள் ஸ்ருதி ஹாசன் தேவர் மகன் படத்தில் போற்றிப் பாடடி பெண்ணே என்ற பாடலை பாடியிருந்தார்.
பிறகு கமல் இயக்கி நடித்த ஹேராம் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார். பின்னர் லக் என்ற ஹிந்தி படத்தில் ஹீரோயினாக அறிமுகமான இவர் விஜய், அஜித், சூர்யா என தமிழின் முன்னணி நட்சத்திரங்களுக்கு ஜோடியாக நடித்தார். தெலுங்கிலும் ஏராளமான படங்களில் ஸ்ருதி ஹாசன் நடித்துள்ளார்.
கடந்த சங்கராந்தியை முன்னிட்டு ஸ்ருதி நடித்த சிரஞ்சீவியின் வால்டர் வீரய்யா, பாலகிருஷ்ணாவின் வீர சிம்ஹா ரெட்டி என இரண்டு படங்கள் வெளியாகியிருந்தது. ஸ்ருதிஹாசன் தற்போது பிரபாஸ் ஜோடியாக சலார் படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் ஸ்ருதிஹாசன் சிறுவயதில் சிங்கப்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் முதன்முறையாக பேசிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், ஸ்ருதி ‘லேடீஸ் அண்ட் ஜென்டில்மேன்’ என்று பேசத் தொடங்கும் போது, கமல் அவரிடம் ‘தமிழில் பேசுங்கள்’ என்று கூறியுள்ளார். பின்னர் யோசித்து தயங்கியபடி ”பெரியோர்களே தாய்மார்களே. என்னைப் போன்ற சின்ன குழந்தைகளே உங்களுக்கு என் அன்பான வணக்கம்.
நான் முன்னாடி சினிமாவில் பாடியிருக்கேன். தேவர் மகன் படத்துல. ஆனா மேடையில பாடுறது இதுதான் முதல் தடவ. நல்லா இருந்தா கைத்தட்டுங்க. நல்லா இல்லனாலும் கைத்தட்டுங்க. நான் சின்னப்பொண்ணு தான” என கியூட்டாக பேசுகிறார்.