Advertisement

திருமணத்திற்கு தயாராகி விட்டார் நடிகை ஸ்ரீதிவ்யா

By: Nagaraj Thu, 02 Nov 2023 10:55:12 AM

திருமணத்திற்கு தயாராகி விட்டார் நடிகை ஸ்ரீதிவ்யா

சென்னை: விரைவில் திருமணம் செய்து கொள்ள தயாராகி விட்டாராம் நடிகை ஸ்ரீ திவ்யா. படவாய்ப்புகள் குறைந்த நிலையில் இந்த முடிவை எடுத்துள்ளார் என்று தகவல்ககள் பரவி வருகிறது.

தெலுங்கு திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் கதாநாயகி ஆனவர் ஸ்ரீ திவ்யா. தமிழில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தின் மூலம் அறிமுகமானார்.

actress,married,soon,sridivya , திருமணம், நடிகை, விரைவில், ஸ்ரீதிவ்யா

மீண்டும் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ‘காக்கி சட்டை’ படத்தில் நடித்தார். தொடர்ந்து ‘மருது’, ‘ஈட்டி’, ‘காஷ்மோரா’, ‘மாவீரன் கிட்டு’ என வரிசையாக படங்களில் நடித்து வந்த ஸ்ரீ திவ்யாவிற்கு திடீரென பட வாய்ப்புகள் நின்று போனது.

இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் தமிழில் தற்போது நடித்துள்ள ‘ரெய்டு’ படம் வருகிற 10ம் தேதி வெளிவருகிறது. தனது ரீ என்ட்ரி குறித்து பேசியுள்ள ஸ்ரீதிவ்யா தான் ஒருவரை காதலித்து வருவதாகவும், விரைவில் அவரை திருமணம் செய்ய உள்ளதாகவும் சூசகமாக தெரிவித்துள்ளார். மேலும் படவாய்ப்புகள் குறைந்து விட்டதும் ஒரு காரணம் என்று விபரமறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Tags :
|