Advertisement

அண்ணா தொடரில் இருந்து நடிகை தாரா விலகல்

By: Nagaraj Mon, 25 Sept 2023 1:15:39 PM

அண்ணா தொடரில் இருந்து நடிகை தாரா விலகல்

சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் அண்ணா தொடரில் நடித்து வந்த நடிகை தாரா மாற்றப்பட்டுள்ளார்.

ரேடியோ நிகழ்ச்சி தொகுப்பாளர் செந்தில்குமார் - நித்யா ராம் ஆகியோர் முதன்மை பாத்திரத்தில் நடிக்கும் தொடர் அண்ணா. பல தொடர்கள் சென்னையில் களமாக வைத்து எடுக்கப்பட்டு வரும் நிலையில், தூத்துக்குடி நிலப்பகுதியை அடிப்படையாக வைத்து அண்ணா தொடர் எடுக்கப்பட்டு வருகிறது.

இதனால், ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் மற்ற தொடர்களைக் காட்டிலும் அண்ணா தொடர் சற்று மாறுபட்டுள்ளது. அண்ணா தொடருக்கு இல்லத்தரசிகள் உள்பட பல இளையதலைமுறையைச் சேர்ந்தவர்களும் ரசிகர்களாக உள்ளனர்.

anna,actor senthil,serial,actress,change,principal ,அண்ணா, நடிகர் செந்தில், சீரியல், நடிகை, மாற்றம், முதன்மை

நான்கு தங்கைகளுடன் வாழ்ந்துவரும் அண்ணன், தனது குடும்பத்தைச் சுற்றி சந்திக்கும் சவால்களே அண்ணா தொடரின் கதை. செந்திலின் தங்கைகளாக நடிகை சுனிதா, நடிகை ப்ரீத்தா, தாரா, ஹேமா சின்ராஜ் போன்றோர் நடித்து வருகின்றனர். இதில் நான்கு தங்கைகளில் ஒருவராக நடிகை விஜே தாரா நடித்து வருகிறார்.

அவர் தற்போது புதிய தொடரில் முதன்மை பாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதனால், அண்ணா தொடரில் வீரலட்சுமி பாத்திரத்தில் தாராவுக்கு பதிலாக தொகுப்பாளர் தர்ஷு சுந்தரம் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இவர் பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும், விருது வழங்கும் நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கியுள்ளார்.

Tags :
|
|
|