Advertisement

இந்தி பிகு படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்கிறார் நடிகை திரிஷா

By: Nagaraj Tue, 01 Dec 2020 1:32:53 PM

இந்தி பிகு படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்கிறார் நடிகை திரிஷா

ரீமேக் படத்தில் திரிஷா... பாலிவுட் படத்தில் 2015-ம் ஆண்டு வெளியாகியுள்ள "பிகு"படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகை திரிஷா நடிக்க உள்ளார்.

தென்னிந்திய திரையுலகத்தில் 18 வருடமாக கதாநாயகியாக இருக்கும் திரிஷா தெலுங்கு, மலையாளம் ஆகிய பிற மொழிகளிலும் நடித்திருக்கிறார். தமிழில் தற்பொழுது கர்ஜனை, சதுரங்க வேட்டை-2, பரமபத விளையாட்டு, ராங்கி, சுகர், 1818 ஆகிய படங்கள் இவர் கைவசம் இருக்கின்றன.

actress trisha,expectation,fans,hindi movie,remake ,நடிகை திரிஷா, எதிர்பார்ப்பு, ரசிகர்கள், இந்திபடம், ரீமேக்

தற்பொழுது மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் பட கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். மேலும் தீபிகா படுகோன் , அமிதாப் பச்சன், இர்பான் கான் அவர்கள் ஆகியோர் நடிப்பில் கடந்த 2015-ம் ஆண்டு வெளியாகியுள்ள 'பிகு' என்ற இந்தி திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகை திரிஷா அவர்கள் நடிக்க போவதாக கூறுகின்றனர் .
முன்னணி இயக்குனர் அவர்கள் இப்படத்தை இயக்க போவதாக தெரியவந்துள்ளது. மேலும் இப்படத்தின் தகவல்கள் விரைவில் வெளியாகும் என்ற எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் இருக்கின்றனர் .

நடிகை திரிஷா, எதிர்பார்ப்பு, ரசிகர்கள், இந்திபடம், ரீமேக்

Tags :
|