Advertisement

குதிரை சவாரி பயிற்சி செய்து வரும் நடிகை திரிஷா!

By: Monisha Thu, 05 Nov 2020 11:10:22 AM

குதிரை சவாரி பயிற்சி செய்து வரும் நடிகை திரிஷா!

பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு தொடங்க இருப்பதையடுத்து நடிகை திரிஷா குதிரை சவாரி பயிற்சி செய்து வருகிறார்.

இயக்குனர் மணிரத்னம் மிகப்பெரிய பட்ஜெட்டில் இயக்கும் படம் பொன்னியின் செல்வன். இந்த படத்தில் திரிஷா குந்தவை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த நிலையில் திரிஷா குதிரை சவாரி பயிற்சி செய்யும் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு உள்ளார்.

பொன்னியின் செல்வன் படத்தில் திரிஷா குதிரை சவாரி செய்வதுபோன்ற காட்சிகள் உள்ளது. இதற்காகவே அவர் பயிற்சி எடுத்து வருகிறார் என்று தகவல் வெளியாகி உள்ளது.

ponniyin selvan,mani ratnam,shooting,trisha,horse riding ,பொன்னியின் செல்வன்,மணிரத்னம்,படப்பிடிப்பு,திரிஷா,குதிரை சவாரி

பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு கொரோனா ஊரடங்குக்கு முன்பே தாய்லாந்து காடுகளில் நடந்தது. மீண்டும் தாய்லாந்து மற்றும் இலங்கை காடுகளில் படப்பிடிப்பை நடத்த மணிரத்னம் திட்டமிட்டு இருந்தார். கொரோனாவால் அது தடைபட்டு உள்ளது. வெளிநாட்டுக்கு செல்வதை ரத்து செய்து விட்டு இந்த மாதம் இறுதியில் ஐதராபாத்தில் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டு உள்ளனர்.

இதற்காக அங்கு அரங்குகள் அமைக்கும் பணி நடக்கிறது. பொன்னியின் செல்வன் இரண்டு பாகங்களாக தயாராகிறது. இதில் விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, சரத்குமார், பார்த்திபன், பிரபு, ஜெயராம், விக்ரம் பிரபு, லால், ஐஸ்வர்யா ராய், ரகுமான், நிழல்கள் ரவி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

Tags :
|