Advertisement

திருமண வதந்திகளுக்கு பதிலடி கொடுத்து பதிவிட்ட நடிகை திரிஷா

By: Nagaraj Sat, 23 Sept 2023 12:54:50 PM

திருமண வதந்திகளுக்கு பதிலடி கொடுத்து பதிவிட்ட நடிகை திரிஷா

சென்னை: தனது திருமண வதந்திகளுக்கு பதிலடி கொடுப்பது போல் உங்களைப் பற்றியும் உங்கள் குழுவை பற்றியும் உங்களுக்குத் தெரியும். வதந்திகளைப் பரப்பாமல் அமைதியாக இருங்கள். வாழ்த்துகள் என்று நடிகை திரிஷா பதிவிட்டுள்ளார்.

மௌனம் பேசியதே, சாமி, கில்லிமௌனம் பேசியதே, சாமி, கில்லி, திருப்பாச்சி, ஜி, ஆறு, குருவி, விண்ணைதாண்டி வருவாயா உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர் த்ரிஷா. இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘லியோ’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.

actress,retaliation,rumors,trisha ,த்ரிஷா, நடிகை, பதிலடி, வதந்திகள்

பல படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். பிசியாக பல படங்களில் நடித்து வரும் த்ரிஷாவுக்கு இன்னும் 40 வயதாகியும் இன்னும் திருமணம் ஆகவில்லை. இவரது திருமணம் குறித்து சில நாட்களாக பல வதந்திகள் பரவி வருகிறது.

இந்நிலையில், இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நடிகை த்ரிஷா சமூக வலைதளங்களில் ஒரு பதிவை பகிர்ந்துள்ளார். அதில், “உங்களைப் பற்றியும் உங்கள் குழுவை பற்றியும் உங்களுக்குத் தெரியும். வதந்திகளைப் பரப்பாமல் அமைதியாக இருங்கள். வாழ்த்துகள்” என்று பதிவிட்டுள்ளார்.

திருமண வதந்தி பரப்பியவர்களுக்கு த்ரிஷா பதில் அளித்துள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Tags :
|