Advertisement

சிரிப்பில் மயக்கும் நடிகை வாணிபோஜன் புகைப்படம் வைரலாகுது

By: Nagaraj Sat, 19 Dec 2020 09:59:59 AM

சிரிப்பில் மயக்கும் நடிகை வாணிபோஜன் புகைப்படம் வைரலாகுது

சின்னத்திரை நயன்தாராவின் சிரிப்பு... நடிகை வாணி போஜன் இவர் தனியார் தொலைக்காட்சியான சன் டிவியில் ஒளிபரப்பான தெய்வமகள் சீரியலில் நடித்ததன் மூலம் பிரபலமானார்.

இதனைத்தொடர்ந்து இவர் ஓ மை கடவுளே திரைப்படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமாகி ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தார். தற்போது, இவர் நிதின் சத்யா தயாரிப்பில் உருவாகும் 'லாக்கப்' என்ற படத்தில் நடித்தார்.

இந்த படத்தில் வாணி போஜனுக்கு ஜோடியாக வைபவ் அவர்களும், வில்லனாக வெங்கட் பிரபு அவர்களும் நடித்துள்ளனர். மேலும் சமீபத்தில் ஹாட்ஸ்டாரில் நடிகர் ஜெய் நடித்துள்ள ட்ரிப்பில்ஸ் என்ற படத்தில் நடித்துள்ளார்.

vani bojan,logo,internet,beautiful laughter ,வாணி போஜன், சின்னத்திரை, இணையம், அழகாக சிரிப்பு

மேலும், இது போன்ற பல படங்களில் கமிட் ஆகியுள்ள வாணிபோஜன் சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளார்.

அந்த வகையில் தற்போது வாணிபோஜன் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிங்க் நிற சேலையில் மிகவும் அழகாக சிரித்துக்கொண்டு இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

தற்போது அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. பல ரசிகர்கள் இவர் சின்னத்திரை நயன்தாரா என்றும் தெரிவித்து வருகின்றனர்.

Tags :
|