Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • கிறிஸ்தவ முறைப்படி திருமணம் செய்த நடிகை வனிதா...மேலும் பல சுவாரசியங்கள்

கிறிஸ்தவ முறைப்படி திருமணம் செய்த நடிகை வனிதா...மேலும் பல சுவாரசியங்கள்

By: Monisha Sun, 28 June 2020 10:32:17 AM

கிறிஸ்தவ முறைப்படி திருமணம் செய்த நடிகை வனிதா...மேலும் பல சுவாரசியங்கள்

நடிகையும் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவருமான வனிதா, ஜூன் 27ஆம் தேதி பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்யவிருப்பதாக செய்திகள் வெளியாகியது. வனிதாவும் இந்த தகவலை தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்தார். அப்போது இந்த திருமணத்தில் தனது மகள்களுக்கு பூரண சம்மதம் என்று அவரே தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் நேற்று வனிதா மற்றும் பீட்டர் பால் திருமணம் கிறிஸ்தவ முறைப்படி சர்ச்சில் நடைபெற்றது. வெள்ளை உடையில் அழகிய தேவதை போல் வனிதாவும் கோட் சூட்டில் பீட்டர்பாலும் திருமண கோலத்தில் செமயாக போஸ் கொடுத்தனர்.

actress vanitha,fans,marriage,peter paul,congratulations ,நடிகை வனிதா,ரசிகர்கள்,திருமணம்,பீட்டர் பால்,வாழ்த்து

திருமணத்தின் போது மோதிரம் மாற்றுவதற்கு முன்பு, பீட்டர் பால், வனிதாவுக்கு லிப் கிஸ் கொடுத்து தனது காதலை வெளிப்படுத்தினார். இந்த திருமணத்தில் வனிதாவின் மகள்கள் உள்பட நெருங்கிய உறவினர்களும் பீட்டர் பால் நெருங்கிய உறவினர்கள் மட்டும் கலந்து கொண்டனர்.

வனிதா-பீட்டர்பால் திருமண புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன. நேற்று முதல் புதிய வாழ்க்கையை தொடங்கி உள்ள நடிகை வனிதாவுக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.

Tags :
|