Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • லட்சுமி ராமகிருஷ்ணனை ஒருமையில் நேரலையில் திட்டி தீர்த்த நடிகை வனிதா

லட்சுமி ராமகிருஷ்ணனை ஒருமையில் நேரலையில் திட்டி தீர்த்த நடிகை வனிதா

By: Nagaraj Mon, 20 July 2020 6:17:34 PM

லட்சுமி ராமகிருஷ்ணனை ஒருமையில் நேரலையில் திட்டி தீர்த்த நடிகை வனிதா

வாடி, போடி என்று இயக்குனரும், நடிகையுமான லட்சுமி ராமகிருஷ்ணனை ஒருமையில் நேரலையில் திட்டி தீர்த்துள்ளார் நடிகை வனிதா.

வனிதா மற்றும் பீட்டர்பால் மூன்றாம் திருமணம் மற்றும் பீட்டர்பால் முதல் மனைவியின் சர்ச்சை ஆகியவை அனைத்து ஊடகங்களிலும் பரபரப்பாக பேசப்பட்டது. இதையடுத்து தற்போது இந்த விவகாரம் குறித்து நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் மற்றும் வனிதா இருவரும் பிரபல இணையதள சேனல் ஒன்றிற்கு நேரலையில் பேட்டி கொடுத்தனர்.

பேட்டியின் ஆரம்பத்திலே நிகழ்ச்சி தொகுப்பாளரை மரியாதை குறைவாக பேசிய வனிதாவை லட்சுமி ராமகிருஷ்ணன் தட்டி கேட்கிறார். இவ்வாறு இந்த வாக்குவாதம் ஆரம்பிக்கிறது. பின்னர் வனிதா மிகவும் தரம் கெட்ட வார்த்தைகளால் லட்சுமி ராமகிருஷ்ணனை திட்டுகிறார். "நீ யாரு மொதல்ல, நீ ஏன் இதுல தலையிடற, உன்ன கிழிச்சு தொங்க விட்டுருவேன். ஒரு புருஷனை கட்டிக்கிட்டு வாழ்ந்த நீ பெரிய யோக்கியமா...? உன் புருஷன் கேடுகெட்ட வெட்கம் கெட்ட ஜென்மம் என கண்டப்படி கீழ்த்தரமாக திட்டினார் வனிதா.

vanitha,lakshmi ramakrishnan,poor word,dissatisfaction ,வனிதா, லட்சுமி ராமகிருஷ்ணன், தரங்கெட்ட வார்த்தை, அதிருப்தி

உடனே லட்சுமி ராமகிருஷ்ணன் தொகுப்பாளரிடம், இந்த மாதிரி குழாயடி சண்டை போடுறவங்க கூடலாம் என்னால் பேசமுடியாது என டீசண்டாக பதிலளித்து முடித்துவிட்டார். ஒரு கட்டத்தில் தொகுப்பாளர் என்ன செய்வதென்றே தெரியாமல் சைலண்டாக ஆகிவிட்டார். இந்த மோசமான வீடியோவை பேட்டி எடுத்த சேனலே வெளியிடவில்லை. ஆனால் வனிதா அதனை வீடியோ ரெகார்ட் செய்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு கமெண்ட்ஸ் சேக்ஷனை ஆப் செய்துள்ளார்.

தரம் கேட்ட வனிதாவின் வார்த்தைகள் கேட்டு பலரும் அதிருப்தி அடைந்துள்ளனர். தற்போது வனிதாவுக்கு பலரும் பலவிதத்தில் சமூக வலைதளங்களில் கண்டனம் எழுப்பி வருகின்றனர்.

Tags :