Advertisement

உடல் எடையை குறைத்து அசத்திய நடிகை வித்யூலேகா ராமன்

By: Nagaraj Wed, 24 June 2020 9:21:46 PM

உடல் எடையை குறைத்து அசத்திய நடிகை வித்யூலேகா ராமன்

உடல் எடையை குறைத்து அசத்தியுள்ளார் நடிகை வித்யூலேகா ராமன்.

நடிகர் நகுல் எப்படி தன் உடல் எடையை குறைத்து அசத்தினாரோ அதேபோல் தற்போது அதே பாணியில் நடிகை வித்யூலேகா ராமன் தன் உடல் எடையை 62 கிலோவாக குறைத்து சாதனை படைத்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: நான் அதிக எடையில் இருந்தபோது பலரும் என்னிடம் வந்து கேட்கும் ஒரு கேள்வி, நீங்கள் எப்படி இவ்வளவு நம்பிக்கையுடன் இருக்கிறீர்கள்? என்பது தான். நான் எப்போதும் இப்படிக் குண்டாகவே தான் வாழ்க்கை முழுவதும் இருக்க வேண்டுமா என்று என்னை நானே கேட்டுக் கொண்டேன்.

weight loss,actress vidyuleka raman,assalamu,telugu movie ,எடை குறைப்பு, நடிகை வித்யூலேகா ராமன், அசத்தல், தெலுங்கு படம்

இன்று என்னை நானே பார்த்து அதிக நம்பிக்கையுடன் இருக்கிறேன். உங்கள் மனதில் ஒன்று உறுதியாக இருந்தால் எதுவுமே சாத்தியம் தான் என்பதை நான் உணர்ந்து கொண்டேன். இது எல்லோரும் சொல்லும் ஒன்று போலத்தான் இருக்கும். ஆனால் உண்மை அதுதான்.

இது எப்படி சாத்தியம். மிகவும் ஒழுக்கத்துடன் இருக்க வேண்டும். வாரம் ஆறு நாட்கள் உடற்பயிற்சி செய்ய வேண்டும். சரியான, சமமான உணவை சாப்பிட வேண்டும். இதற்கென ரகசிய மாத்திரை எதுவும் கிடையாது. கடின உழைப்பால் மட்டுமே அது சாத்தியம்.

weight loss,actress vidyuleka raman,assalamu,telugu movie ,எடை குறைப்பு, நடிகை வித்யூலேகா ராமன், அசத்தல், தெலுங்கு படம்

வாழ்க்கையில் எதுவுமே எளிதில் கிடைத்து விடாது. ஆனால் உங்களுக்கு கிடைக்கும் பலனை பார்க்கும்போது நீங்கள் பட்ட கஷ்டம், வியர்வை, கண்ணீர் என அனைத்திற்கும் அது மறைந்து போகும். இப்போது என்னுடைய எடை 68 கிலோ. என்றார்.

நீதானே என் பொன் வசந்தம் படத்தில் காமெடி நடிகையாக அறிமுகமானவர் வித்யூலேகா ராமன். குணசித்ர நடிகர் மோகன்ராமின் மகள். அதன் பிறகு தீயா வேலை செய்யணும் குமாரு, ஜில்லா, வீரம், காக்கி சட்டை, வேதாளம் உள்பட பல படங்களில் நடித்தார். தற்போது தெலுங்கு படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

Tags :