Advertisement

ஆதிபுருஷ் 3 நாள் வசூல்

By: vaithegi Mon, 19 June 2023 2:41:09 PM

ஆதிபுருஷ் 3 நாள் வசூல்

ஆதிபுருஷ் திரைப்படம் மூன்று நாட்களில் உலகம் முழுவதும் ரூ.300 கோடி வசூலித்து உள்ளதாக தகவல் .. மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த 17-ம் தேதி வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. படத்தை பார்த்த பலரும் படத்தின் கிராபிக்ஸ் காட்சிகள் சரியில்லை, படத்தின் ஸ்க்ரீன் பிளே சரியில்லை. படம் பொம்மை படம் போல இருக்கிறது என்று வெளிப்படையாகவே கருத்துக்களை கூறி வருகிறார்கள்.

ஆனால், விமர்சனங்கள் எப்படி வந்தாலும், வசூலில் படம் உலகையே திரும்பி பார்க்க வைத்து உள்ளது. ஆனால், முதல் நாளைவிட இரண்டாம் நாளில் ஆதிபுருஷ் வசூல் குறைந்துள்ளது. முதல் நாளான வெள்ளிக்கிழமை உலகம் முழுவதும் ரூ.140 கோடி வசூலித்ததாகவும் 2-ம் நாளான சனிக்கிழமை ரூ.100 கோடி வசூலித்ததாகவும் கூறப்படுகிறது. அதாவது முதல் நாளைவிட 2-ம் நாள் வசூல் ரூ.40 கோடி குறைந்துள்ளது.

vasool,adipurush ,வசூல்,ஆதிபுருஷ்

இந்த நிலையில், 2 நாட்களில் மட்டும் ரூ. 240 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்து ள்ளது. இதையடுத்து நேற்று ஞாயிற்றுக் கிழமை என்பதால் அதிக வசூல் வரும் என படக்குழு கணித்துள்ளது. அதன்படி, நேற்று வரை உலக முழுவதும் இந்த படம் ரூ. 300 கோடி வசூலுத்திருக்கலாம் என கணிக்கப்பட்டு உள்ளது.

ராமாயண காவியத்தை அடிப்படையாகக் கொண்ட புராண கதையை தழுவி எடுக்கப்பட்ட ஆதிபுருஷ் திரைப்படம் இறுதியாக 5 மொழிகளில் வெளியாகியுள்ளது. இயக்குனர் ஓம் ராவுத் இயக்கிய இப்படத்தில் பிரபாஸ் ராமராகவும், கிருத்தி சனோன் சீதையாகவும், சன்னி சிங் லட்சுமணனாகவும், சைஃப் அலி கான் ராவணனாகவும் நடித்து உள்ளனர்.

Tags :
|